5 Years of Petta: பேட்ட வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு.. படத்தில் இடம்பெறாத 5 நிமிட காட்சிகள் வெளியீடு..!
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படம் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தில் இடம் பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த், சசிகுமார், த்ரிஷா, மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக நீண்ட நாட்களுக்கு ரஜினிக்கான மாஸ் சீன்கள் படத்தில் அதிகளவில் இடம் பெற்றிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
Idhu padam ila, Sambhavam🔥 5 years of marana mass #Petta
— Sun Pictures (@sunpictures) January 10, 2024
▶ https://t.co/4Glip7NyFb#5YearsOfPetta#Superstar @rajinikanth @ilaiyaraaja @karthiksubbaraj @anirudhofficial @SasikumarDir @VijaySethuOffl @trishtrashers @SimranbaggaOffc @MalavikaM_ @actorsimha @Nawazuddin_S…
இந்த படத்தில் தான் முதன்முதலாக ரஜினி - த்ரிஷா, ரஜினி - சிம்ரன் ஜோடி இணைந்து நடித்தனர். மேலும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கும் இதுதான் முதல் படமாக அமைந்தது. இதனிடையே பேட்ட படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை சிறப்பிக்கும் வகையில் பேட்ட படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் தொடர்பான காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.