Rajinism : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 47 ஆண்டு திரைப்பயணம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
#47 years of Rajnism : கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி தலைவரின் 47வது ரஜினிசத்தின் அதிகாரப்பூர்வமான கவர் பிக்ச்சர்ரை வெளியிட்டுள்ளார். யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரே கலைஞன்.
#47 years of Rajnism : 47வது ரஜினிசம் கொண்டாட்டம்...அதிகாரபூர்வ கவர் பிக்சர் வெளியிட்டார் பிரேம்ஜி ... வி லவ் யூ தலைவா...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் ஒரு சகாப்தம். ஆகஸ்ட் 15-ஆம் தேதியோடு சினிமா துறையில் அவர் அடி எடுத்து வைத்து 47 ஆண்டுகள் நிறைவடைக்கின்றன. நினைத்து பார்க்கவே பிரமிப்பாய் இருக்கிறது அவரது பயணம். இன்றும் அதே சுறுசுறுப்புடன், ஸ்டைலுடன் காணப்படுவது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரே கலைஞன்.
Happy to launch the Official Cover Pic for 47 YEARS OF RAJINISM. #47YearsOfRajinismCCP
— PREMGI (@Premgiamaren) August 9, 2022
We Love You Thalaivaa..@rajinikanth
Design: @vicky_creatives
TEAM @TDT_Rajiniedits#Rajinikanth #Superstar #Thalaivar #Jailer pic.twitter.com/PVibY88f5v
47-வது ரஜினிசம்:
அவரின் இந்த 47வது ரஜினிசம் திரை ரசிகர்களுக்கு பேரானந்தத்தை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி தலைவரின் 47-வது ரஜினிசத்தின் அதிகாரபூர்வமான கவர் பிக்ச்சர்ரை வெளியிட்டுள்ளார். அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களுக்கும் புத்துணர்த்தியை கொடுத்துள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்துவருகின்றன.
47 ஆண்டுகள் திரை பயணம் :
47 ஆண்டுகளாக அவரின் இந்த திரை பயணம் பல மைல்கல்களை அமைத்து கொடுத்துள்ளது. அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, உள்ளிட்ட படங்கள் தலைவரை வெற்றியின் உச்சிக்கு கொண்டுசென்ற படங்கள் எனலாம். அவரின் ரசிகர்கள் பட்டாளம் எண்ணில் அடங்காதது. அந்த வகையில் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர்.
View this post on Instagram
ரஜினி #169 :
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயிலர். இது அவரின் 169வது படமாகும். இப்படத்திற்கு கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை அமைத்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் நிச்சயம் தலைவரின் ஹிட் படங்களில் ஒன்றாக அமையும்.