30 years of Rasukutty : லொகேஷன் பார்க்கப் போன இடத்தில் அதிர்ச்சி ... பாக்யராஜ் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்!
30 ஆண்டுகளை கடந்த ராசுக்குட்டி திரைப்படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் கே. பாக்யராஜ்

தமிழ் சினிமா கண்ட ஒரு அற்புதமான படைப்பாளி கே. பாக்யராஜ். இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவர் 1992ம் ஆண்டு இயக்கி, கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்த திரைப்படம் 'ராசுக்குட்டி'. ஐஸ்வர்யா, மனோரமா, செம்புலி ஜெகன், கல்யாண் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. மறு உருவாக்கம் செய்யப்பட்ட அப்படத்தின் வீடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்டு மிகவும் வைரலானது.
ராசுக்குட்டி திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த மறு உருவாக்கம் செய்யப்பட்ட வீடியோவில் பாக்யராஜ் பகிர்ந்திருந்தார். அதில் அவர் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். ஒரு வீடு அருகில் மரம், கொஞ்சம் காலி இடம் இப்படி வேண்டும் என பல இடங்களில் தேடி பார்த்த போது ஒரு நல்ல லொகேஷன் அமைந்தது.
View this post on Instagram
ஒரு 100 அடி தொலைவில் அந்த வீடு இருந்தது. வரப்பு வழியாக ஒத்தையடி பாதையில் செல்லும் போது வழியெல்லாம் டியூப் லைட்டுகள் கம்பத்தில் கட்டியிருந்தது. பகல் நேரம் என்பதால் விளக்குகள் எரிய விடாமல் இருந்தது. ஒரு சுவர் அதற்கு பக்கத்தில் ஒரு பாதை வழியாக சென்றால் ஒரு பெரிய வாசல் இருந்து. அங்கு பலர் உட்கார்ந்து இருந்தார்கள். சிலர் கட்டிலின் மேல் அமர்ந்து இருந்தார்கள். அப்போது வந்த ஒருவர் உங்களை எல்லாம் தெரியும் என சொல்லாமலே போய் விட்டானே என புலம்பி அழுதார்.
வீட்டின் உள்ளே பார்த்தால் ஒரு போட்டோவின் முன் மாலை போடப்பட்டு விளக்கேற்றி வைத்து இருந்தார்கள். அப்போது தான் தெரிந்தது அது துக்க வீடு என்று. உங்களுக்கு நேற்று விஷயம் தெரியாதா, இப்ப தான் தெரிந்ததா என மீண்டும் அவர் அழுது புலம்ப என்னால் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. பிறகு சமாளித்து கொண்டு அங்கிருந்து சமாதானப்படுத்தி வெளியேறினேன்" என கூறினார் பாக்யராஜ்.
#Rasukutty recreation 😂 Vintage Bhagyaraj 🤣😂👌🔥 (🔞 jokes) https://t.co/TJ7zOxaC3e
— Prasanna (@tweetngrose) December 14, 2022
இந்த சம்பவம் ராசுக்குட்டி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நினைத்து பார்க்கும் போது மிகவும் சிரிப்பாக இருக்கிறது. எத்தனையோ இடங்களுக்கு லொகேஷன் பார்க்க சென்று இருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு சம்பவம் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது என அந்த வீடியோவில் பாக்யராஜ் பேசியிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

