மேலும் அறிய

26 Years of Love Today: சேராம போனாலும் ஓக்கேதான்.. கொண்டாடிய ரசிகர்கள்.. லவ் டுடே ரிலீஸ் ஆகி 26 ஆண்டுகளாச்சு..

விஜய் நடித்த “லவ் டுடே” படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

2கே கிட்ஸ்களுக்கு இன்றைய பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் தான் தெரியும். அதேசமயம் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் பேவரைட் ஆன படங்களில் ஒன்றான விஜய் நடித்த “லவ் டுடே” படம் பற்றி தெரியுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். அந்த படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிறது. 

விஜய்யின் ரசிகர்களுக்கு ஃபேவரைட் 

1997 ஆம் ஆண்டு  அறிமுக இயக்குநர் பாலசேகரன் இயக்கிய லவ் டுடே படத்தில்  விஜய் , சுவலட்சுமி,மந்திரா,ரகுவரன்,  ராஜன் பி.தேவ் கரண் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷிவா இசையமைத்த இப்படம்  175 நாட்களுக்கு மேல் ஓடி விஜய்யின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் நடிப்பிலும் தேர்ந்த நடிகர் என நிரூபித்தது. இப்படம் தெலுங்கில் சுஸ்வாகதம் என்றும் , கன்னடத்தில் மஜ்னு என்றும் , இந்தியில் க்யா யேஹி பியார் ஹை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சுருக்கமான கதை 

தன்னுடன் விருப்பத்துக்கு நோ சொல்லாத அப்பாவுடன் இருக்கும்  விஜய்க்கு, கண்டிப்பு மிக்க போலீஸ்காரரின் மகளான சுவலட்சுமியை கண்டதும் காதல் என்றாகி விடும். ஆனால் காதலில் விருப்பம் இல்லாத சுவலட்சுமி, விஜய்யின் கோரிக்கையை நிராகரிக்கிறார். நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் காதல் மீதான மோகத்தால் நேரத்தை வீணாக்குகிறார். ஒரு கட்டத்தின் விஜய்யின் காதல் நெருக்கடி, சுவலட்சுமி குடும்பத்துடன்  ஊரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் விஜய் அவரை கண்டுபிடிக்க புறப்படுகிறார். 

ஆனால் அதற்குள் அப்பா ரகுவரன் விபத்தில் இறக்கிறார். நண்பர்கள் விஜய் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அவரது இறுதிச்சடங்குகளை கூட செய்ய முடியாத நிலை  விஜய்க்கு ஏற்படுகிறது. இறுதியாக சுவலட்சுமி விஜய்யின் காதலை ஏற்றுக் கொண்டாலும், அந்த காதல் தான்  எல்லாவற்றையும் இழக்க காரணமாக அமைந்தது என கூறி விஜய்யை காதலை வெறுக்கிறார்.  

ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ் 

இயக்குநர் பாலசேகரன் ஒரு நேர்காணலில், இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய், சுவலட்சுமி ஒன்று சேர்ந்திருந்தால் நிச்சயம் படம் ஓடாமல் போயிருக்கும். ஆனால் காதல் பெறுவது மட்டுமல்ல, இழப்பதும் தான் என்பதை அழுத்தமாக சொல்லியதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக குறிப்பிட்டிருப்பார். 

பலமாக அமைந்த பாடல்கள்

அறிமுக இசையமைப்பாளரின் இசை என தெரியாத அளவுக்கு ஷிவா இசையமைத்திருந்தார். ‘என்ன அழகு.. எத்தனை அழகு’ பாடல் பலரின் ஆல்டைம் பேவரைட்டாக இன்றளவும் உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget