Karthi-Suriya: ‛மைனஸை பிளஸ் ஆக மாற்றுவார்...சொந்த சாதனையை மிஞ்சுவார்’ சூர்யாவை புகழ்ந்த கார்த்தி!
25 Years Of Suriyaism: நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவருக்கு சூர்யாவின் சகோதரரும்,நடிகருமான கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![Karthi-Suriya: ‛மைனஸை பிளஸ் ஆக மாற்றுவார்...சொந்த சாதனையை மிஞ்சுவார்’ சூர்யாவை புகழ்ந்த கார்த்தி! 25 Years Of Suriyaism Actor Karthi Shared Cute Childhood Photo with Suriya on Instagram Karthi-Suriya: ‛மைனஸை பிளஸ் ஆக மாற்றுவார்...சொந்த சாதனையை மிஞ்சுவார்’ சூர்யாவை புகழ்ந்த கார்த்தி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/1ae2d1e970acf6599fb0e48caba4a17d1662461587890224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவருக்கு சூர்யாவின் சகோதரரும்,நடிகருமான கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Truly a beautiful and blessed 25years..! Dream and believe..!
— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
Your suriya.
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகிய சூர்யா இதுவரை நடிகர், சிறப்புத் தோற்றம் என 50 படங்களில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்-விஜய் தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலகினார் அஜித்.இந்த காரணத்தால் தான் சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, பேரழகம், ஆய்த எழுத்து, கஜினி, சில்லுனு ஒரு காதல், சிங்கம், மாற்றான், சூரரைப்போற்று, ஜெய்பீம் என மறக்கமுடியாத படங்களில் நடித்துள்ளார். இதில் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம், விக்ரம் 3 ஆம் பாகம் என அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.
மேலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் தொகுப்பாளர், பல படங்களின் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா பயணத்தை அழகானது என்றும் ஆசிர்வதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் னவு காணுங்கள், நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்திருந்தார். நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால் சூர்யாவுக்கு சினிமா வாழ்க்கை எளிதாக அமையவில்லை. தனது தந்தைக்கு அவப் பெயரை சேர்க்கக்கூடாது என்பதில் சூர்யா தெளிவாக இருந்தார். கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரின் திறமையை மேலும் மெருகூட்டியது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சேர்த்தது.
View this post on Instagram
இந்நிலையில் சூர்யாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை வாழ்த்தும் வகையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார் என் சகோதரர் சூர்யா என தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)