Vaali Songs: ஃபாரீனே போகாமல் வெளிநாட்டை வர்ணித்து வாலி எழுதிய 2 ஹிட் பாடல்கள்!
வெளிநாட்டுக்கே செல்லாமல் வாலி தன்னுடைய பாடல்களில் வெளிநாட்டின் அழகை வர்ணித்துள்ளார் அப்படி அவர் எழுதிய இரண்டு பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் அதிக பாடல்கள் எழுதி சாதனை படைத்த பாடலாசிரியர்களில் ஒருவர் தான் கவிஞர் வாலி. அதுமட்டுமின்றி 5 தலைமுறை நடிகர்களுக்கு அவரவர் கால கட்டங்களுக்கு ஏற்ற போல் பாடல்கள் எழுதி கொடுத்தவர் வாலி .
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் சூர்யா, சிம்பு என்று பல முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இவர் பாடலாசிரியர் மட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 15000க்கும் அதிகமான பாடல்கள் எழுதி கொடுத்திருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஷங்கர் கணேஷ், தேவா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், டி இமான், ஹரீஷ் ஜெயராஜ் ஆகியோருக்கு பல பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
வெளிநாட்டுக்கு செல்லாமலேயே அந்த நாட்டின் அழகை வர்ணித்து எழுதுவதில் கை தேர்ந்தவர் வாலி. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். வாலி அப்படி எழுதிய பாடலில் டாப்பில் இருப்பது, முக்காலா முக்காபுலா பாடல் தான் இந்த பாடலை இவர் எழுதிய போது, அமெரிக்காவுக்கு சென்றது இல்லை என்றாலும், "ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது, பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல், என்னுடன் டெக்சாசில் நாடி வருது என்று வர்ணித்து எழுதி இருந்தார்.
முக்காலா முக்காபுலா பாடலை மனோ மற்றும் சுவர்ணலதா ஆகியோர் பாடியது இந்த பாடலுக்கு மிகப்பெரிய பலம் என கூறலாம். இதை தொடர்ந்து, நியூ யார்க் பக்கம் செல்லாமலே அந்த நாட்டின் அழகையும் தன்னுடைய பாட்டில் வர்ணித்துள்ளார் வாலி.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சூர்யா - ஜோதிகா நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், 'சில்லுனு ஒரு காதல்'. இந்த படத்தில் சூர்யாவை மற்றும் ஜோதிகா இருவருமே போட்டி போட்டு, தங்களின் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற... நியூயார்க் நகரம் என தொடங்கும் பாடலை வாலி தான் எழுதி இருந்தார்.
மனைவியை பிரிந்திருக்கும் போது தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போல் இந்த பாடலின் வரிகள் இருக்கும் "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ.. என வாலி எழுதிய வரிகள் நியூ யார்க் நகரை பற்றி கேட்பவர்களுக்கே அங்கு இருக்கும் உணர்வை கொடுக்கும். இந்த பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

