மேலும் அறிய

18 years of Ullam Ketkumae : கல்லூரி வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய 'உள்ளம் கேட்குமே'... ஒன்ஸ்மோர் கேட்க மனம் ஏங்குதே! 18 வருஷங்கள் ஆகிடுச்சா..

பார்வையாளர்களின் கல்லூரி வாழ்க்கையை  நினைவூட்டிய 'உள்ளம் கேட்குமே' இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர்களில் ஒருவர் ஜீவா. 12B படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து அவர் உருவாக்க திட்டமிட்ட 'பெப்சி' படத்தின் திரைக்கதை ஏனோ பல காரணங்களால் தடைகளை சந்தித்து முடங்கிப்போனது. பின்னர் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து 'உள்ளம் கேட்குமே' என்ற பெயரில் 2005ம் ஆண்டு வெளியானது. 

 18 years of Ullam Ketkumae : கல்லூரி வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய 'உள்ளம் கேட்குமே'... ஒன்ஸ்மோர் கேட்க மனம் ஏங்குதே! 18 வருஷங்கள் ஆகிடுச்சா..

ஐந்து கல்லூரி நண்பர்கள் இடையே உருவாகும் காதல், பிரிவை மையமாக வைத்து ஒரு வித்தியாசமான திரைக்கதையை அமைத்த ஜீவாவிற்கு 'உள்ளம் கேட்குமே' ஒரு வெற்றி படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்த நண்பர்கள் ஒன்றாக இணையும்போது அவர்களுடன் சேர்த்து பார்வையாளர்களையும் பூரிக்க வைத்தது.

ஆர்யா, பூஜா மற்றும் அசின் அறிமுகமான படம் என்றாலும் காலதாமதத்தால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேறு படங்களின் மூலம் பிரபலமானார்கள். ஏராளமான திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து இருந்தாலும் உள்ளத்தை கொள்ளை கொண்டது துறுதுறுப்பான லைலா தான். 

18 years of Ullam Ketkumae : கல்லூரி வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய 'உள்ளம் கேட்குமே'... ஒன்ஸ்மோர் கேட்க மனம் ஏங்குதே! 18 வருஷங்கள் ஆகிடுச்சா..

நட்பின் பெருமையை பறைசாற்றி எத்தனையோ திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன, அந்த வகையில் இப்படம் பார்வையாளர்களின் கல்லூரி வாழ்க்கையை  நினைவூட்டியது. அவர்களின் டீனேஜ் நட்பு வட்டம், கல்லூரியில் மலர்ந்த முதல் காதல் அவற்றை நினைத்து மனதை ஊஞ்சலாட செய்தது. படம் முதலில் வெளியான போது ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் போன படம் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வெற்றி பெற்றது.

தாமதமாக வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறாது என்ற சென்டிமென்டை உடைத்தது உள்ளம் கேட்குமே. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை காதுகளுக்கு இனிமை சேர்த்தது. என்னை பந்தாட பிறந்தவளே, ஓ மனமே, மழை மழை போன்ற பாடல்கள் பலரின் பிளே லிஸ்டில் நிச்சயம் இன்றைக்கு இடம்பெற்றுள்ள பாடல்கள். படத்தின் வெற்றிக்கு பாடல்களுக்கும் ஒளிப்பதிவும் முக்கியமான காரணமாக அமைந்தன. வெற்றி பெற்ற இப்படம் பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.   

கல்லூரி நாட்களுக்கு நம்மை ரீவைண்ட் செய்த உள்ளம் கேட்குமே இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget