மேலும் அறிய

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ; வாக்கு எண்ணும் மையத்திற்கு தபால் வாக்குகள் கொண்டு செல்லும் பணி தொடங்கியது..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் வாக்கு இன்னும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவாகியது அதில். 1,95,495 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு என்னும் மையமான பனையபுரம் அரசு பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணப்படும். தற்பொழுது தபால் வாக்குகள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

தபால் ஓட்டுகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 544 வாக்குகளும், 226 காவல்துறை வாக்குகளும், ஆன்லைன் வாக்குப்பதிவு 28 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 798 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

விக்கிரவாண்டி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கையானது 14 மேசைகளில் 20 சுற்றுகளாக நடைபெறும். மேலும் இதில் மேசை ஒன்றுக்கு மேற்பார்வையாளர், உதவியாளர் நுண் பார்வையாளர் தல ஒருவர் நியமனம். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மேஜைகளில் நடைபெறும். பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு என்னும் பகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிக்கு 14 கிராம உதவியாளர்கள் வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள் இதர பணியாளர்கள் என சுமார் 150 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் 3 ஆண்டுகள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணமடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதற்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதியன்று நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

29 வேட்பாளர்கள் போட்டி

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதியுடன் முடிவடைந்தது. 24-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 26-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த 11 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேரும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக சுமார் 10 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டது மேலும் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் பாமக வேட்பாளர் சி அன்புமணி ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் அதிகமாக இட ஒதுக்கீடு தொடர்பாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான வாதத்தையே பிரச்சாரத்தில் முன்வைத்து இருத்தரப்பும் வாக்கு சேகரித்தினர். 

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்

இவர்களை தேர்வு செய்ய இத்தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் 1,95,495 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலை நடத்த 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது, இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான பேலட் யூனிட், கட்டுப்பாட்டு எந்திரமான கன்ட்ரோல் யூனிட், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் என 1,104 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

82.48% வாக்குகள் பதிவு

இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது, ஒரு சில வாக்கு சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளது அதில். 1,95,495 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மொத்தம் 276 வாக்கு சாவடி மையங்களில் இருந்து வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget