மேலும் அறிய

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்படும் கொங்குமண்டலமான கோவை மாநகராட்சியில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றாலும், அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கொங்கு பகுதியில் மிகப்பெரும் சரிவையே சந்தித்தது. எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற முடிந்தது. ஆனால், கோவையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனது. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அத்தனை கட்ட தலைவர்களும் கோவையில் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்த நிலையிலும் திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த அளவிற்கு கோவையின் முதலமைச்சர் என்று கூறப்பட்ட வேலுமணி கோவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

இந்த தோல்வி திமுகவிற்கு கவுரவப்பிரச்சனையாக மாறியது. நாடாளுமன்றத் தேர்தலில் கோவையை கைப்பற்றியபோதும், சட்டமன்றத்தில் சறுக்குகிறோம் என்றால் நம்மிடம் தான் எதோ தவறு உள்ளது என்று கருதினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு, இவர்களுக்கு ஏன் வாக்களிக்காமல் விட்டோம் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு தனது செயல்பாடு இருக்கும் என்று கூறியிருந்தார். கோவையில் அடிப்படையிலேயே பல பிரச்சனைகள் இருந்தது. குறிப்பாக திமுகவினருக்குள் இணக்கமின்மை. பல கோஷ்டிகளாக பிரிந்து கிடந்த திமுகவினர் தேர்தல் சமயங்களில் உள்ளடி வேலை பார்த்தது, பொதுமக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாதது என்று திமுகவின் பலவீனங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

இந்த நிலையில் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராமச்சந்திரன் மற்றும் சக்கரபாணி ஆகிய அமைச்சர்களை நியமித்தார் ஸ்டாலின். ஆனால், அதன்பின்னர் வலுவான ஒரு ஆள் அந்த மாவட்டத்திற்கு தேவை என்று நினைத்தபோது தான் அந்த இடத்திற்கு சரியான ஆளாக செந்தில் பாலாஜி இருப்பார் என்று நம்பியது திமுக. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரையும் மீறி கரூரில் திமுக கொடியை பறக்க வைத்தார் செந்தில் பாலாஜி.

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

கோவைக்கு செந்தில்பாலாஜியை நியமிப்பது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த திமுக தலைமை, கோவையின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னும் பிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் என்று கூறி செந்தில் பாலாஜியை அங்கு அனுப்பியது.

கோவையை திமுகவின் வசம் கொண்டு வந்து முதலமைச்சரின் குட்புக்கில் இடம்பெறவும், தனது செல்வாக்கை கோவை வரை விரிவுபடுத்தவும் விரும்பிய செந்தில்பாலாஜி கோவையிலேயே வீடு எடுத்து தங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. அடிக்கடி திமுக தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளில் கலந்துகொண்டது, உதயநிதியை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியது, வேலைவாய்ப்பு முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார். குறிப்பாக நிர்வாகிகளின் குறைகளை காதுகொடுத்து கேட்டது, பிரச்சனைகளை சரி செய்ய முயற்சித்தது என்று கட்சியை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தார். செந்தில்பாலாஜியின் இதுபோன்ற நகர்வுகளால் பொதுமக்கள் மெல்ல மெல்ல திமுகவின் பக்கம் நகர ஆரம்பித்தனர்.

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

உள்ளாட்சித் தேர்தலில் கோவையை முழுமையாக திமுகவின் வசம் கொண்டு வரவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உறுதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. அதற்காக வேட்பாளர் தேர்விலும் மிக கறாராகவே நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிபாரிசுகள் மூலம் போட்டியிட வாய்ப்பு வாங்கலாம் என்று கோவை திமுக நிர்வாகிகள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறதோ அவருக்கு தான் சீட்டு என்பதில் உறுதியாக இருந்தார் செந்தில்பாலாஜி. பணபலம், சிபாரிசு என்று எதற்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நாள் முதல் அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிய செந்தில்பாலாஜி, எந்த நிலையிலும் வேட்பாளர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும், அதனால் தான் வேட்பாளர்கள் ஒரு பகுதி விடாமல் ஏறி இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளின் பலனை இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் அறுவடை செய்திருக்கிறது திமுக. திமுக பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல; இமாலய வெற்றி. 11 எம்எல்ஏக்கள் இருந்தும் உள்ளாட்சியில் எதிர்கட்சியாகக் கூட அதிமுகவை வர விடாத அளவிற்கு கொத்தாக அள்ளியிருக்கிறது திமுக.

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. 

வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.  73 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் போட்டியிட்ட  9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும்,  5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளிலும், போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்தால் திமுக 76 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

கோவையில் க்ளீன் ஸ்வீப்..! ஒர்க் அவுட்டான செந்தில் பாலாஜி ஃபார்முலா...!

உச்சபட்ச அதிர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்த வார்டான 92 வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது திமுக. இந்த தேர்தலில், வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற அதிமுக, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தாங்கள் பலம் பொருந்திய பகுதியாக கருதிய கோவையில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மட்டுமல்லாது, தனது சொந்த மாவட்டமான கரூரையும் மொத்தமாக திமுகவிற்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. கரூரில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 42 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றியால் திக்குமுக்காடிப் போயிருக்கிறதாம் திமுக தலைமை. இந்த இமாலய வெற்றியால் திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி என்று மார்தட்டுகின்றனர் திமுகவினர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget