TN Urban Local Body Election 2022 : பெண்களுக்கான இட ஒதுக்கீடு: பலன் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் - கனிமொழி எம்.பி
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி மயிலாப்பூர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு காலையில் தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த வாக்குப்பதிவில் இன்று காலை முதலே பல அரசியல் கட்சியின் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வாக்களித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் ஆர்வமுடன் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள், சென்னை - மயிலாப்பூர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.அதன்பிறகு செய்தியாளர்களை சந்திந்த அவர், பிரச்சார நேரத்திலிருந்தே மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அதேபோல், முதல்வர் மீதும், திமுக மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை. வைத்திருக்கிறார்கள் என்றார்.
Urban Local Body Election : மதுரையில் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்றச்சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்..
தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணியினருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்.பிற தேர்தல்களை போல உள்ளாட்சி தேர்தலை கருதி மக்கள் வாக்களிப்பதில்லை. இது தவறான கண்ணோட்டம். அவர்களுடன் கூட இருந்து உழைக்கும் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல். எனவே நிச்சயம் வாக்களிக்க வேண்டும். நேரம் ஆக ஆக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு இந்த உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். தேர்வாகும் பெண் பிரதிநிதிகள் மக்களை நேரடியாக அணுகி பிரச்சினை கேட்டறிந்து செயல்பட வேண்டும். அரசியல் தளத்தில் பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்