Palani Municipality Election : ஒரே ஓட்டு, மாறிய தலையெழுத்து.. பழனியில் குலுக்கல் முறையில் வெற்றிபெற்ற விசிக வேட்பாளர்..!
Palani Municipality Election Result 2022: திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சி 12வது வார்டில் குலுக்கல் முறையில் விசிக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,பழனி நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முருகேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் சின்னத்தாய் இருவரும் 499 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்த நிலையில் இறுதியாக குலுக்கல் முறையில் பொதுநபர் எடுத்த சீட்டு அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்