Tamilisai Soundararajan: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?- தமிழிசை பரபரப்பு பேட்டி
Tamilisai Soundararajan: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கும் தெலங்கானா மாநிலத்துக்கும் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநராக இருந்த போதே, மக்கள் ஆளுநராக பணியாற்றினேன். தீவிரமாக மக்கள் பணியாற்றவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு கட்சித் தலைமை தடை விதிக்கவில்லை எனவும் , எனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், வருங்கால திட்டம் குறித்து தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது, ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளது. எனது நான்கரை ஆண்டுகால பதவி காலத்தில் 4 முதலமைச்சர்கள் மற்றும் 2 தேர்தல்களை சந்தித்துள்ளேன். எனது விருப்பத்தின் பெயரில், மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.