Local Body Election: ‛படிவம் வருவதற்குள் தேர்தல் வந்திடுச்சு...’ நாங்க போட்டி போட டைம் கொடுக்கல... சிவசேனா ஃபீலிங்!
தேர்தலுக்கு தயாராக தேர்தல் ஆணையம் சரியான நேரம் கொடுக்கப்படவில்லை அதனால் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் சிவசேனா கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிக்க பரப்புரை என தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் ,தேர்தலில் தாங்கள் போட்டியிட போதிய காலம் தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்படவில்லை என்பதும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஏ மற்றும் பி படிவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தங்கள் கட்சியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறுகின்றனர் சிவசேனா கட்சியினர்.
சிவசேனா கட்சியின் சார்பாக ஒரு கூட்டம் நடந்ததாகவும், இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியிட்டதாக தகவல் கிடைத்த நிலையில் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் அவர்களை தொடர்பு கொண்டு தாங்கள் ஏன் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கேட்ட கேள்விக்கு அவர்களின் பதிலாக கூறப்பட்டது
சிவசேனா கட்சியின் கொள்கையான தேசமும்,தெய்வீகமும் இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் வேட்பாளர்களை ஆதரிப்பதோடு, அவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட சிவசேனா கட்சி அலுவலகத்தில், நகர் புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் கூறினர்.
சிவசேனா கட்சியோட தலைமை தலைமை அறிவுருத்தியதாகவும், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சிவசேனா கட்சி சார்பாக வேட்பாளர்களை களமிறக்க முடியவில்லை. மேலும் தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் கொடுக்காததால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து 'ஏ' மற்றும் 'பி' படிவம் கிடைப்பதில் தேர்தல் விதிமுறையின் படி சிக்கல் ஏற்பட்டதாகவும்.
மேலும் கட்சியின் தலைமை அறிவுறுத்தலின் படியும், தமிழகத்தின் மாநில பொறுப்பாளர் அறிவுறுத்தலின் படியும். சிவசேனா கட்சி போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா கட்சியின் கொள்கையான தேசமும்,தெய்வீகமும் இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து, ஓட்டு போடவோம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினர்.
வேட்பு மனு வாபஸ் நிறைவு பெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்னும் படிவம் கூட அனுப்பாமல் கட்சி தலைமை இப்படி வஞ்சித்திருக்க கூடாது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்