ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார் : இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா
ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் நடத்த தயார் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது. கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் நடத்த தயார் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல பரிந்துரை, ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை, அது நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராக உள்ளது மற்றும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திறன் கொண்டது என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்துத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மூன்று தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. பின்னர்தான் சில சமயங்களில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது, சில சமயங்களில் நாடாளுமன்றம் கால அட்டவணையைக் குழப்பியது. ஒன்று. நேஷன் ஒன் தேர்தல் ஒரு நல்ல பரிந்துரை, ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை."
5 ஆண்டு கால சட்டசபையை முடிக்க முடியாத ஒரு பேரவை, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதை ஒழிக்க முடியுமா அல்லது நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்