New Voter ID Card: புது வாக்காளர் அட்டை வேண்டுமா? 15 நாட்களில் வீட்டிற்கே வரும் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
New Voter ID Card: புதிய வாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

New Voter ID Card: புதிய வாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு, அடையாள அட்டை 15 நாட்களில் வீட்டிற்கே வரும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை - புதிய நடைமுறை
புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, புதிய அடையாள அட்டையை 15 நாட்களில் பயனாளரின் வீட்டிற்கே அனுப்பும் வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதையும், நிகழ்நேர கண்காணிபையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தேர்தல் ஆணைய அறிக்கையில், “"புதிய நடைமுறயானது தேர்தல் பதிவு அதிகாரி மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உருவாக்கம் தொடங்கி, அஞ்சல் துறை (DoP) மூலம் வாக்காளருக்கு அதனை வழங்கும் வரை ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு தகவல்:
வாக்காளர் அடையாள அட்டையின் உருவாக்கம், தபால் துறை மூலம் விநியோகம் என ஒவ்வொரு நடவடிக்கையும், பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ECINet தளத்தில் ஒரு பிரத்யேக IT தொகுதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய IT தளம் , பயனர்கள் தங்களுக்கான புதிய அடையாள அட்டையை பெறுவதை எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- படி 1: https://voters.eci.gov.in/ இல் உள்ள தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலை (NVSP) அணுகவும்
- படி 2: உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி பதிவு செய்து கேப்ட்சாவை உள்ளிடவும்
- படி 3: உங்கள் பெயரைப் பயன்படுத்தி உங்கள் கணக்கை உருவாக்குங்கள். கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதிப்படுத்தி, பின்னர் OTP-ஐக் கோரவும்.
- படி 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ சரியாக உள்ளிடவும்.
- படி 5: உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைந்து, பின்னர் கேப்ட்சா மற்றும் மற்றொரு OTP ஐ உள்ளிடவும்.
- படி 6: புதிய வாக்காளர் பதிவுக்கு "படிவம் 6 ஐ நிரப்பு" ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட, உறவினர், தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை நிரப்பவும்.
- படி 7: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- படி 8: பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்ய உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வாக்காளர் அட்டையை ட்ராக் செய்வது எப்படி?
- படி 1: https://voters.eci.gov.in/ என்ற தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலை (NVSP) அணுகவும்
- படி 2: உங்கள் விவரங்கள் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
- படி 3: 'விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- படி 4: படிவம் 6 மற்றும் 6A ஐ நிரப்பிய பிறகு நீங்கள் பெற்ற உங்கள் குறிப்பு எண்ணை உள்ளிடவும்.
- படி 5: உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, நிலையைப் பார்க்க சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வாக்காளர் அடையாள அட்டை விநியோக முறை
- விரைவான விநியோகம்: புதிய நடைமுறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்த 15 நாட்களுக்குள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவார்கள் ,
- நிகழ்நேர கண்காணிப்பு: வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் வரை வாக்காளர்கள் கண்காணிக்க முடியும்.
- SMS அறிவிப்புகள்: விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பம் புதுப்பிக்கப்படும்போது ஒவ்வொரு கட்டத்திலும் SMS அறிவிப்புகளைப் பெறுவார்.
- ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பு: தேர்தல் ஆணையம் அதன் பிரத்யேக தகவல் தொழில்நுட்ப தொகுதியை அஞ்சல் துறையுடன் ஒருங்கிணைத்துள்ளது. இந்த முயற்சி தரவு பாதுகாப்பைப் பராமரிக்கும் அதே வேளையில் சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.





















