மேலும் அறிய

தமிழகம் எத்தியோப்பியாவாக மாறும் - வைகோ எச்சரிக்கை!

குழந்தைகள் பசியின்றி கல்வி கற்கிறார்கள் என்றால் அதற்குத் திராவிட மாடல் அரசே காரணம் எனவும், இது வெறும் உணவுத் திட்டம் அல்ல, ஏழைத் தாயின் கண்ணீரைத் துடைத்த அறவழித் திட்டம் என வைகோ தெரிவித்துள்ளார்.

சீர்காழி: தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம் தலைமை வகித்தார். முன்னிலையாகக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தியாவிற்கே வழிகாட்டும் காலைச் சிற்றுண்டித் திட்டம்

"தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த காலங்களில் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, ஏழை எளிய குடும்பங்களில் வாழக்கூடிய தாய்மார்களின் பெரும் கவலையைப் போக்கிய அரசு இது. கூலி வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலையில் தங்கள் குழந்தைகளுக்குச் சரியான உணவைச் சமைத்துக் கொடுக்க முடியாமல், பசியோடு பள்ளிக்கு அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் ஒருபுறம் வசதியாகச் சாப்பிட, ஏழைப் பிள்ளைகள் பசியோடு பாடத்தைக் கவனிக்கும் நிலை நீடித்தது.

இந்தச் சமூக ஏற்றத்தாழ்வைப் போக்க, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் உன்னதமான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இன்று லட்சக்கணக்கான குழந்தைகள் பசியின்றி கல்வி கற்கிறார்கள் என்றால் அதற்குத் திராவிட மாடல் அரசே காரணம். இது வெறும் உணவுத் திட்டம் அல்ல, ஏழைத் தாயின் கண்ணீரைத் துடைத்த அறவழித் திட்டம்."

மகளிர் உரிமைத் தொகையும் தேர்தல் வாக்குறுதிகளும்

தொடர்ந்து பேசிய அவர், "பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்று மாத கால உரிமைத் தொகையாக 3000 ரூபாய் மற்றும் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் என மொத்தம் 5000 ரூபாய் இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மக்கள் நலத் திட்டங்களைத் தங்கு தடையின்றித் தொடர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் செந்தில் செல்வனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள எண்ணற்ற புதிய திட்டங்கள், தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முதல்வர் முன்னுரிமை அளித்துள்ளார்," என்றார்.

மேகதாது அணை - தமிழகத்திற்கு வரும் பேராபத்து

தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீர் குறித்துப் பேசிய வைகோ, "மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட 5900 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அந்த அணை மட்டும் கட்டப்பட்டால், தமிழகத்திற்குச் சொட்டு நீர் கூட வராது. ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சம் வந்து பிள்ளைகள் எலும்பும் தோலுமாகத் தவிப்பதைப் போல, நம் தமிழகக் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

இந்த ஆபத்தை உணர்ந்துதான் நான் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். இது அரசியல் கட்சிகளைக் கடந்த போராட்டம். நான் என் கட்சியின் பெயரையோ, கொடியையோ முன்னிறுத்தி இதைச் செய்யவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இத்தகைய அணைக்கட்டுகளைத் தடுக்கத் திராவிட இயக்கத்தால் மட்டுமே முடியும். சகோதரத்துவத்தோடு வாழும் தமிழர்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்," என எச்சரித்தார்.

அண்ணாமலைக்கும் வடநாட்டுக்கும் எச்சரிக்கை

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், "திராவிட இயக்கத்தை அழிப்பேன் என்று சிலர் பேசி வருகிறார்கள். பல தியாகிகளின் இரத்தத்தாலும், உழைப்பாலும் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு ஆலமரம். இதை யாராலும் அசைக்கக் கூட முடியாது. வடநாட்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிராகச் சிம்ம சொப்பனமாகத் திகழும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இன்று உயர்ந்து நிற்கிறார். சமூக நீதியைக் காக்க அவர் எடுக்கும் முடிவுகள் இந்தியா முழுமைக்கும் வழிகாட்டுகிறது. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. திமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். சீர்காழி தொகுதியில் உதயசூரியன் சின்னம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குகளையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களையும் கண்டித்துப் பேசினார். கூட்டத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget