மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும்.. சட்ட மன்ற தொகுதி யாருக்கு? - பி.டி.ஆர்., Vs சுந்தர் சி போட்டி !
திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களம் காணுகிறார். போட்டியாக இயக்குநர் சுந்தர் சி புதிய நீதிக்கட்சி சார்பாக இரட்டை இலையில் களம் காண்கிறார். - முழு விவரம் உள்ளே.

இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடாக மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சட்ட மன்ற தேர்தலில் முக்கியமாக பார்க்கபடும் மதுரை மத்திய தொகுதி
கோடை வெயிலை தாண்டி தேர்தல் தாக்கம் அனல் பிடிக்கிறது. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகளை முடித்துள்ளனர். மறுப்பக்கம் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டு களத்தில் குத்தித்துள்ளது, நாம் தமிழகர் கட்சி. தமிழக வெற்றிக் கழகம் பிரச்சாரம் தொடர்பான அனுமதிக்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் சசிகாலா – ராமதாஸ் கூட்டணி ஒரு பக்கம் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுக தங்களது கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. இந்த சூழலில் மதுரை மாநகரின் மையமாக உள்ள மத்திய சட்ட மன்ற தொகுதியில் எதிர்பார்த்தைப் போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி மத்திய தொகுதிக்கு இயக்குநர் சுந்தர் சி – அவர்களை களம் இறக்கியுள்ளது. இதனால் மதுரை மத்திய தொகுதி இரண்டு முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக பார்க்கப்படுகிறது.
புதிய நீதிக்கட்சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் மாநில தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்ற அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கே உரிய தனித்த பாணியில் மதுரை மத்திய தொகுதியில் செயலாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரேங்க் கார்டு போல தனது செயல்பாட்டு அறிக்கையை வார்டு வாரியாக வீடு, வீடாக தான் செய்தனவற்றை வரிசைப்படுத்தி பொதுமக்களின் இல்லங்கள் தோறும் கொண்டு சேர்த்து வருகிறார்.
போட்டிக் களத்தில் இயக்குநர் சுந்தர் சி
2016ம் ஆண்டிலிருந்து இதனை நடைமுறைப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து தனது செயல்பாட்டு அறிக்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வார்டு வாரியாக அரசு அதிகாரிகளுடன் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் குறுகிய கால பிரச்னைகள் உள்ளிட்டவற்றை வகைப்படுத்தி தீர்வு கண்டு வருகிறார். இவர் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தான் செய்தவற்றை சொல்லி வாக்கு கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரில் டாப் 10 வரிசைப்படுத்தினால் நிச்சயம் அதில் பி.டி.ஆரும் இடம் பெற்றிருப்பார் என தெரிவிக்கின்றனர் உடன்பிறப்புகள். இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் எனவும் பேசப்படுகிறது. எனினும் தற்போது சார்பாக இயக்குநர் சுந்தரி சி களம் இறக்கப்பட்டுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடாக மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மத்திய தொகுதி யாருக்கு கிடைக்கும் என காத்திருந்து பார்ப்போம்.



















