மேலும் அறிய

மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும்.. சட்ட மன்ற தொகுதி யாருக்கு? - பி.டி.ஆர்., Vs சுந்தர் சி போட்டி !

திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களம் காணுகிறார். போட்டியாக இயக்குநர் சுந்தர் சி புதிய நீதிக்கட்சி சார்பாக இரட்டை இலையில் களம் காண்கிறார். - முழு விவரம் உள்ளே.

இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடாக மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சட்ட மன்ற தேர்தலில் முக்கியமாக பார்க்கபடும் மதுரை மத்திய தொகுதி

கோடை வெயிலை தாண்டி தேர்தல் தாக்கம் அனல் பிடிக்கிறது. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகளை முடித்துள்ளனர். மறுப்பக்கம் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டு களத்தில் குத்தித்துள்ளது, நாம் தமிழகர் கட்சி. தமிழக வெற்றிக் கழகம் பிரச்சாரம் தொடர்பான அனுமதிக்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் சசிகாலா – ராமதாஸ் கூட்டணி ஒரு பக்கம் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுக தங்களது கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. இந்த சூழலில் மதுரை மாநகரின் மையமாக உள்ள மத்திய சட்ட மன்ற தொகுதியில் எதிர்பார்த்தைப் போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி மத்திய தொகுதிக்கு  இயக்குநர் சுந்தர் சி – அவர்களை களம் இறக்கியுள்ளது. இதனால் மதுரை மத்திய தொகுதி இரண்டு முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக பார்க்கப்படுகிறது.

புதிய நீதிக்கட்சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி  

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என தெரிவித்துள்ளார். 

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் மாநில தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்ற அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கே உரிய தனித்த பாணியில் மதுரை மத்திய தொகுதியில் செயலாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரேங்க் கார்டு போல தனது செயல்பாட்டு அறிக்கையை வார்டு வாரியாக வீடு, வீடாக தான் செய்தனவற்றை வரிசைப்படுத்தி பொதுமக்களின் இல்லங்கள் தோறும் கொண்டு சேர்த்து வருகிறார். 

போட்டிக் களத்தில் இயக்குநர் சுந்தர் சி

2016ம் ஆண்டிலிருந்து இதனை நடைமுறைப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து தனது செயல்பாட்டு அறிக்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வார்டு வாரியாக அரசு அதிகாரிகளுடன் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் குறுகிய கால பிரச்னைகள் உள்ளிட்டவற்றை வகைப்படுத்தி தீர்வு கண்டு வருகிறார். இவர் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தான் செய்தவற்றை சொல்லி வாக்கு கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரில் டாப் 10 வரிசைப்படுத்தினால் நிச்சயம் அதில் பி.டி.ஆரும் இடம் பெற்றிருப்பார் என தெரிவிக்கின்றனர் உடன்பிறப்புகள். இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் எனவும் பேசப்படுகிறது. எனினும் தற்போது சார்பாக இயக்குநர் சுந்தரி சி களம் இறக்கப்பட்டுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடாக மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மத்திய தொகுதி யாருக்கு கிடைக்கும் என காத்திருந்து பார்ப்போம்.

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget