மேலும் அறிய

திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.. ஆர்.பி. உதயகுமார் முருகன் கோயிலில் 3 மணி நேரம் சாமி தரிசனம்!

ஆர்.பி. உதயகுமார் தேர்தலில் வெற்றி பெற வேண்டி மதுரை நேதாஜி ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

காலை 4 மணிக்கு தனது வேண்டுதலை ஆரம்பித்த அவர் கிட்டதட்ட 3 மணி நேரம் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தார். 

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி 
 
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஏறத்தாழ முடிந்து விட்டன. திமுக 21 கூட்டணி கட்சிகளுடன்  ஒரு அணியாகவும், அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தாமக உட்பட கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட உள்ளன. தேர்தலையொட்டி கடைசி நேரத்தில் தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட சசிகலாவும், மருத்துவர் ராமதாசின் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகமும் தனித்து களம் காண உள்ளது. அதிமுக – திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் போட்டியை தாண்டி இம்முறை பலரும் ஓரளவு வாக்கு சதவீதத்தை பிரிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
 
அதிமுக – பாஜக கூட்டணி கணக்கு
 
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10 மேற்கு மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளில் 44 இடங்களை கைப்பற்றியது. கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுகவிற்கு கணிசமான ஆதரவு கிடைத்தது. இம்முறையும் அந்த தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென கடுமையாக வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வெற்றிக்கு ராமதாஸ் தடையாக இருப்பரா: என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் ராமதாஸிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இம்முறை ராமதாசும், அவருடைய மகன் அன்புமணிக்கும் நடக்கும் உட்கட்சி பிரச்னையால் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது சந்தேகமாகவே உள்ளது, கடந்த தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் கடந்த முறை பாமக வென்ற இடங்களை கைப்பற்றுவதே சிரமம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 
 
மதுரை முக்கிய புள்ளிகளுக்கு கேட்ட இடத்தில் சீட்  
 
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே முக்கிய புள்ளிகளாக உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல் செல்லூர் ராஜுவிற்கு மதுரை மேற்கு தொகுதியும், திருமங்கலம் ஆர்.பி.உதயகுமாருக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியை ராஜன் செல்லப்பாவிற்கும் ஒதுக்கப்பட்டது.  
 
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக சீட் வெளியீடு  
 
அதே போல் மேலூரில் P.பெரியபுள்ளான் (எ) செல்வத்திற்கும், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் K. மகேந்திரனுக்கும், சோழவந்தான் (தனி) கி. மாணிக்கத்திற்கும், மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் P. சரவணனுக்கும், உ.சிலம்பட்டி மகேந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி மற்றும் தெற்கு தொகுதியும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதியில் 8 சட்ட மன்ற தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. 
 
வேண்டுதலை துவங்கிய ஆர்.பி.உதயகுமார்
 
மதுரை திருமங்கலம் தொகுதி அ. தி.மு.க வேட்பாளர் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தலில் வெற்றி பெற வேண்டி மதுரை நேதாஜி ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். காலை 4 மணிக்கு தனது வேண்டுதலை ஆரம்பித்த அவர் கிட்டதட்ட 3 மணி நேரம் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தார். இந்த முறை அதிமுக வெற்றி பெற்றால் ஆர்.பி.உதயகுமாருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்பதால் களத்தில் தீவிரமாக பணி செய்துவருகிறார்.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget