மேலும் அறிய

சாதி ஓட்டுகளை நம்பும் ஏ.சி.சண்முகம்? இயக்குநர் சுந்தர் சி-க்கு மதுரை மத்திய தொகுதியில் சீட் !

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிட உள்ளதாக புதிய நீதிக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் தமிழத் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி, புதிய நீதிக்கட்சியின் சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அமைச்சர் பி.டி.ஆர்.,க்கு எதிராக போட்டியிடும் திரை பிரபலம்.

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஏறத்தாழ முடிந்து விட்டன. திமுக 21 கூட்டணி கட்சிகளுடன்  ஒரு அணியாகவும், அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தாமக உட்பட கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட உள்ளன. தேர்தலையொட்டி கடைசி நேரத்தில் தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட சசிகலாவும், மருத்துவர் ராமதாசின் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகமும் தனித்து களம் காண உள்ளது. அதிமுக – திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் போட்டியை தாண்டி இம்முறை பலரும் ஓரளவு வாக்கு சதவீதத்தை பிரிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
 
மதுரை முக்கிய புள்ளிகளுக்கு கேட்ட இடத்தில் சீட்  
 
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே முக்கிய புள்ளிகளாக உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல் செல்லூர் ராஜுவிற்கு மதுரை மேற்கு தொகுதியும், திருமங்கலம் ஆர்.பி.உதயகுமாருக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியை ராஜன் செல்லப்பாவிற்கும் ஒதுக்கப்பட்டது.  
 
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக சீட் வெளியீடு  
 
அதே போல் மேலூரில் P.பெரியபுள்ளான் (எ) செல்வத்திற்கும், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் K. மகேந்திரனுக்கும், சோழவந்தான் (தனி) கி. மாணிக்கத்திற்கும், மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் P. சரவணனுக்கும், உ.சிலம்பட்டி மகேந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி மற்றும் தெற்கு தொகுதியும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதியில் 8 சட்ட மன்ற தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. இந்நிலையில் மீதம் உள்ள இரண்டு தொகுதியில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளரும், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சியும் களாம் காண்கின்றனர். இந்த சூழலில் புதிய நீதிக் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
தென் மாவட்டத்தில் முக்கிய புள்ளிகள்
 
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நேரத்தில் முக்கிய புள்ளிகள் தென் மாவட்டங்களில் களம் இறங்கி வருகின்றனர். சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், காரைக்குடியில் சீமான், சிவகங்கை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார். இந்த வரிசையில் சினிமா பிரபலம் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
புதிய நீதிக்கட்சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட சுந்தர் சி
 
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட வேட்பாளர் சுந்தர் சி. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என தெரிவித்துள்ளார். இக்கட்சியின் 2ஆவது வேட்பாளராக சென்னையில் போட்டியிட இருக்கும் நபர் குறித்து திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மதுரை மத்திய தொகுதி
 
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் கடந்த 1957- ஆம் ஆண்டு முதல் 14 பொதுத் தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் இதுவரை திமுக 7, காங்கிரஸ் 3, தமாகா 2, அதிமுக மற்றும் தேமுதிக தலா ஒரு முறையும், ஒரு முறை சுயேட்சை வேட்பாளராக பழ.நெடுமாறனும் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பிடிஆர் பழனிவேல் ராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்ற பிரபலமாவார். தற்போது அவரது மகன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வாக தொடர்கிறார்.
 
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி
 
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 73,205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜோதி முத்துராமலிங்கம் 39,019 வாக்குகள் பெற்றார். அச்சமயம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,41,913 பேர். ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகள் 1,47,989 பேர். தற்போது எஸ்ஐஆர் தீவிர வாக்காளர் திருத்தத்திற்குப் பிறகு இத் தொகுதியின் ஆண் வாக்காளர்கள் 95,632, பெண் வாக்காளர்கள் 1,01,198. மூன்றாம் பாலினத்தவர் 26 என மொத்தம் 1,96,856 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
 
பாராட்டையும் பெற்ற அமைசர்
 
முக்குலத்தோருடன் கணிசமான எண்ணிக்கையில் முதலியார், பிள்ளைமார் உள்ளிட்டா வேளாளர் சமூக மக்களும், இஸ்லாமியர்களும், தெலுங்கு மற்றும் சௌராஷ்ட்ர மொழி பேசக்கூடிய மக்களும் உள்ளனர். இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொகுதியில் நடைபெற்ற பணிகள் குறித்து வாக்காளர்களுக்கு அறிக்கை அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிற சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து மாறுபட்டு இயங்கி வருவதில் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சாதி பாசத்தில் கொடுக்கப்பட்ட சீட்?
 
மதுரையில் தேர்தல் அறிவிற்கு முன்பாக வ.உசி.,க்கு சிலை அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை ஏ.சி.சண்முகம் முன்னின்று நடத்தினார். இதில் நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர் சி ஆகியோரும் பங்கேற்றனர். இருவரும் பிள்ளைமார் சாதியை சேர்ந்தவர்கள் என மேடையில் பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் புதிய நீதிக்கட்சியில் சுந்தர் சி.,க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது சாதிக்காரர் என சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Embed widget