Vaiko: "பிரதமரே உங்கள் பதவி நீடித்திருக்காது! உங்கள் நாற்காலி பறிபோகிவிடும்" - வைகோ பேச்சு
பிரதமரின் நாற்காலி பதவி விரைவில் பறிபோகிவிடும் என்று வைகோ பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது தென்காசி நாடாளுமன்ற வேட்பாளராக சகோதரி ராணி அவர்கள் உதயசூரியின் சின்னத்திலே பல்லாயிரக்கணக்கான வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத சூழல் உருவாக்கியுள்ளது. நடக்க இருக்கு தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்ற கேள்விக்கு விடை அளிக்க போகிற தேர்தல். நடக்க இருக்கும் தேர்தலில் பாசிசத்தை வெளிப்படுத்தும் கூட்டத்திற்கு 19ஆம் தேதி விடை அளிக்கிறீர்கள்.
கலைஞருக்கு கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு இப்போது ஊர் சுத்தி வருகிற எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று வழக்கறிஞர் வில்சன் போராடி வாங்கினார். அண்ணா சதுக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கம் அதன் பக்கத்திலே ஜெயலலிதாவிற்கும் ஒரு சமாதி. அதே போல நாங்கள் போட்டிருக்கிற கலைஞருக்கும் இங்கே தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வாதாடினார். நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியுள்ளார்.
ஒரு காலமும் நடக்காது:
இந்தியா கூட்டணி டெல்லி கூட்டத்தில் பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்தார்கள். முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் தான் நடக்கிறது. மதவெறி கும்பல் இந்தியாவை துண்டு துண்டாக்க நினைப்பவர்கள் திராவிட இயக்கத்தை முதலில் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே 130 கோடி மக்களுக்கு நீங்கள் தலைமை தாங்கி இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்பதாவது தடவை வருகிறீர்கள். இத்தனை தடவை வருகிறீர்களே நீங்கள் என்ன பேசுகிறீர்கள். திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு ஒளித்து விட்டு தான் வருவீர்கள் என்று பேசுகிறீர்கள். உங்களால் இயலுமா? ஒருவேளை அப்படியே இயலும் என்று நினைத்தாலும் ஒரு பிரதம மந்திரி பேசலாமா? ஒன்பதாவது தடவையாக வருகிறீர்களே திராவிட இயக்கத்தை அளிக்கலாம் என்று நினைத்தால் ஒரு காலமும் நடக்காது.
பிரதமர் அவர்களே உங்கள் பதவி நீடித்திருக்காது. உங்கள் பிரதமர் நாற்காலி பறிபோகிவிடும். நீங்கள் நிலைத்திருந்து பிரதமர் பதவியை அனுபவிக்க முடியாது. உயிரையும் ரத்தத்தையும் திராவிட இயக்கத்தில் இருக்கிறோம். திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என்று லட்சக்கணக்கான கோடிகளை கொட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே பிஜேபி கொட்டி இருக்கிறது. நாங்கள் கோயிலை இடிக்க சொல்லவில்லை. அதைத்தான் பராசத்தியில் கலைஞர் எழுதினார், கோயில் போக கூடாது என்பதற்காக இல்லை கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்று பூசாரியை தாக்கினேன் என்ற வசனத்தை என்று பேசினார்.