Ramanathapuram Election Results 2024: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படுதோல்வி! மீண்டும் எம்.பி.யான நவாஸ் கனி!
Ramanathapuram Election Results 2024: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறுவாரா? அல்லது தி.மு.க. வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பயணத்தின் முக்கிய கட்டத்தில் போட்டியிட்ட இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணி: நவாஸ் கனி 397644 (+ 133637)
ஓ. பன்னீர்செல்வம் 264007 ( -133637)
அதிமுக: ஜெய பெருமாள் 78404 ( -319240)
நாம் தமிழர்: சந்திர பிரபா 77210 ( -320434)
நோட்டா 4981
30% தபால் வாக்குகள் நிராகரிப்பு..!
ராமநாதபுரத்தில் 30 % சதவீத தபால் வாக்குகள் செல்லாதவை, முறையான கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பெறப்பட்ட 8501 தபால் வாக்குகள் கவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மேஜைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதில், ஒரு தபால் வாக்கு முறையான கையொப்பம் இல்லை மேலும் மூத்த குடிமக்கள் வாக்குபதிவுகள் கையெப்பம் மற்றும் பல் வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் 30 சதவீதம் வாக்குகள் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் மோடி அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.
ராமநாதபுரம்:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து தொகுதிகளும் முக்கியமானதாக கருதப்பட்டாலும், இந்த முறை பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்திருப்பது ராமநாதபுரம் மக்களவதை் தொகுதியே ஆகும். அதற்கு காரணம் இந்த முறை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருப்பதே ஆகும்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 17 ஆயிரத்து 688 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இந்த தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 3 ஆயிரத்து 36 ஆகும். மொத்தம் 68.16 சதவீத வாக்குகள் கடந்த 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது.
சவால் தருவாரா ஓ.பி.எஸ்?
ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக களமிறங்கியதால் நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக நவாஸ்கனி களமிறங்கினார். அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் சார்பில் பா.சத்யா போட்டியிட்டனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில், அ.தி.மு.க.வில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வின் கூட்டணியுடன் இந்த தொகுதியில் களமிறங்கியிருப்பதால் ராமநாதபுரம் மீது அனைவரது கவனமும் திரும்பியது. ஆனாலும், நவாஸ் கனிக்கு பெரியளவில் அவரால் சவால் அளிக்க இயலவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

