மேலும் அறிய

Lok Sabha Election 2024: இந்திரா காந்திதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் - முத்தரசன்

காலாவதியான சுங்கசாவடிகளை மத்திய அரசு நீக்க வேண்டும். அதை தான் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது. ஆனால் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது - முத்தரசன்

வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.

பின்னர்  முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பா.ஜ.க. மத்திய அரசு மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறது. ஸ்டேட் பாங்க், நீதிமன்றம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி முடக்கப்பட்டது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடி அபராதம், மார்க்சிஸ்ட் கட்சிக்கு அபராதம் என எதிர்க்கட்சிகளை முடக்கி ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே உணவு கடைசியில் ஒரே கட்சி என்பார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று சொல்கிறார்.

Lok Sabha Election 2024: இந்திரா காந்திதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் - முத்தரசன்

ஆனால், நாகை மீனவர் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பி அதனை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார். ஆனால் குடியரசு தலைவர் ஒன்றிய அரசு ஜெயலலிதா பெயரை சூட்ட முடியாது என பதிலளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பெயரை மீனவர் பல்கலைகழகத்திற்கு வைக்க முடியாது என்பதை கண்டிக்கவும் இல்லை, ஒன்று கள்ள கூட்டணி மற்றொன்று நள்ளிரவு கூட்டணி இவர்களுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியையும் சேர்த்து மக்கள் இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தருவார்கள்.

கடந்த தேர்தலில் நள்ளிரவு கூட்டணி கள்ள கூட்டணி ஒரே அணியாக இருந்த போதும் தி.மு.க. 39 தொகுதிகளில் வென்றது. இந்த முறை நள்ளிரவு கூட்டணியும், கள்ள கூட்டணியும் தனி, தனியாக மோதும்போது தி.மு.க. 40 இடங்களில் வெல்லும். வேலூர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் அவருக்காக வாக்குசேகரித்தோம் போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத்தான் ஆனால் அது குறித்து ஒன்றிய அரசு கவலைப்படவில்லை.

Lok Sabha Election 2024: இந்திரா காந்திதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் - முத்தரசன்

வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டகத்தின் முதுகில் அதிக சுமை ஏற்றி ஒட்டகம் கண் முன் ஒரு குண்டு ஊசியை எடுப்பார் அதை போல் மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410 ஆனால் இப்போது 1200 ஆக உள்ளது. அண்மையில்  வர்த்தக சிலிண்டர் உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது. விலை உயர்வு ஏற்படும் போது அது எங்களுக்கு சம்மபந்தமில்லை என மோடி அவரது வகையறாக்கள் சொன்னார்கள். ஆனால் தேர்தல் காரணமாக சிலிண்டர் விலையை குறைத்து மோடி கபட நாடகம் ஆடுகிறார். கச்சத்தீவை காங்கிரஸ் இந்திரா காந்திதான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். தமிழக மீனவர்கள் அங்கு வழிப்பட்டனர். இப்போது இன்றைக்கு பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை,

Lok Sabha Election 2024: இந்திரா காந்திதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் - முத்தரசன்

காலாவதியான சுங்கசாவடிகளை மூட வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இன்றைக்கு முட்டாள்கள் தினம் சுங்கசாவடி நிர்ணயம் காலம் முடிந்து பல சுங்கசாவடிகள் செயல்படுகிறது. சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி வருமானவரிதுறை, அமலாக்க துறை ஆகியவைகள் அரசியல் அமைப்புசட்ட அமைப்புகள் மோடியின் ஆட்சியில் சீர் குலைந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தை நியமனம் செய்யும் குழு எப்படி இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதி ராஜினாமா செய்துவிட்டனர். ஒன்றிய அரசாங்கத்தில் அதிகாரி ஓய்வுபெற்ற பின் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். சில நாட்களில் ராஜினாமா செய்கிறார், தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுப்பாட்டில் உள்ளது. மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது, சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget