மேலும் அறிய

Lok Sabha Election 2024: ஆட்டுக்குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன் - அமைச்சர் டிஆர்பி ராஜா

வாஜ்பாய் போன்ற மகத்தான தலைவர்கள் இருந்த இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்து வந்து விட்டு, அந்த இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக புதைத்து விட்டு மிகவும் கொச்சையாக அரசியலை சில பேர் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். கோவை மருதமலை முருகன் கோவிலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வழிபாடு செய்த பின்னர், தேர்தல் பரப்புரையை துவக்கினார். அப்பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரச்சுரங்களை வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பின்னர் பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது தொழில் துறை அமைச்சர் டிஆர்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Lok Sabha Election 2024: ஆட்டுக்குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன் - அமைச்சர் டிஆர்பி ராஜா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட நான் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன். முதலமைச்சர் செய்துள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்குகளை சேகரிப்போம். தேர்தல் களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. 10 வருடங்களாக ஆட்சியில் உள்ளவர்கள் எதுவும் செய்யவில்லை. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.

எதிரணியினர் தரத்தை குறைக்கக் கூடாது

இதையடுத்து பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “எதிர்க்கட்சியில் உள்ள சில பேர் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை. நீங்கள் மட்டும் ஏன் கேட்குறீர்கள்? பிரியாணி, ஆட்டுக்குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன். என்னை ஈசல் பூச்சி என அண்ணாமலை சொன்னதில் சந்தோஷம். ஏன் அவருக்கு அவ்வளவு உறுத்துகிறது எனத் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் ஏன் எரிகிறது? மக்களைப் பார்த்தாலே ஏன் எரிகிறது எனத் தெரியவில்லை. வாஜ்பாய் போன்ற மகத்தான தலைவர்கள் இருந்த இயக்கம். என் தலைவர் கலைஞர் மதித்த வாஜ்பாய் இருந்த இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்து வந்து விட்டு, அந்த இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக புதைத்து விட்டு மிகவும் கொச்சையாக அரசியலை தமிழகத்திற்கு சில பேர் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள். அவர் குறித்து நான் பேசுவது அவசியமற்றது. ஆனால் தமிழகத்தில் ஜனநாயகம் செழித்தோங்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் வேலை செய்து வருகிறார். தேர்தல் காலத்தில் எதிரணியினர் மாற்றி மாற்றி சொல்வார்கள். அதனால் சூடு பறக்கும். ஆனால் தரத்தை மீண்டும் மீண்டும் எதிரணியினர் குறைத்து கொண்டே இருக்கக் கூடாது.

Lok Sabha Election 2024: ஆட்டுக்குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன் - அமைச்சர் டிஆர்பி ராஜா

அதிமுகவினர் ஓரளவு சரியாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பேர் கட்சியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை. தமிழகம் ஜனநாயம் மற்றும் நாகரீக அரசியலுக்கு பெயர் போன மாநிலமாக திகழ்கிறது. எல்லோரும் சேர்ந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இந்த நாடும், இனமும் முன்னேறக்கூடாது, அழிய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள். கீழ்தரமான அரசியலை ஒரங்கட்டி விட்டு வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பத்து ஆண்டுகளில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த இரண்டரை ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் தான் தமிழகம் செழித்தோங்கி, பளபளவென மின்னுகிறது. இந்தியாவின் நெம்பர் 1 மாநிலமாக விளங்குகிறது. மாநிலத்திலும், ஒன்றியத்திலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் சூழல் வந்திருக்கிறது. மகத்தான வளர்ச்சி தமிழகத்திற்கு காத்திருக்கிறது. கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வரப்போகிறது. அடுத்த கட்டமாக சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது. கோவையை பொருத்தவரை மெட்ரோ ரயில், டெக்ஸ் சிட்டி, விமான நிலைய விரிவாக்கம் என அதிமுக கிடப்பில் போட்டது அனைத்தையும் செய்தது திமுக தான்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget