மேலும் அறிய

Durai Vaiko: மதிமுகவிற்கு திருச்சி திருப்புமுனையாக அமையுமா? - துரை வைகோவிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

திருச்சியின் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக களம் இறங்குகிறது. திருப்புமுனையை ஏற்படுத்துமா திருச்சி.

திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை..

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை விரைந்து நடத்தினர். கூட்டணி இருக்கக்கூடிய ஒரு சில கட்சிகளுக்கு உடனடியாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி,  அவர்களுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை குறித்தும் அதிகாரப்பூர்வமாக திமுக தலைமை அறிவித்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தை கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. பின்பு நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தொடக்கம் முதல் இறுதி வரை இழுபறியாக இருந்தது காங்கிரஸ் கட்சி தான். கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் மீண்டும் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். 

Durai Vaiko: மதிமுகவிற்கு திருச்சி திருப்புமுனையாக அமையுமா? -  துரை வைகோவிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை இழுபறி

ஆனால் ஒரு சில இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கரூர், திருச்சியில் ஏற்கனவே வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது பெரும் அதிருப்தி இருப்பதாக புகார்கள் வந்ததாக திமுக தலைமை, காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தது. இருந்தாலும் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தொடர்ந்து பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்தது. குறிப்பாக திருச்சி தொகுதியை மீண்டும் எனக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசு  டெல்லி வரை சென்று காங்கிரஸ் மேலிட தலைமையிடம் கோரிக்கையை வைத்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைமை மீண்டும் திருநாவுக்கரசு, திருச்சி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Durai Vaiko: மதிமுகவிற்கு திருச்சி திருப்புமுனையாக அமையுமா? -  துரை வைகோவிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

மதிமுக - காங்கிரஸ் போட்டா போட்டி..

இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகையால் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சியை ஒதுக்க வேண்டும் என மதிமுக தலைமை தொடர்ந்து வலியுறுத்தினார். இதனால் திருச்சி தொகுதியை பெறுவதில் காங்கிரசுக்கு,  மதிமுகவும் கடுமையான போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து திமுக தலைமை, காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தொகுதி ஒதுக்கீடு உறுதி செய்யபட்டது. மேலும் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராடி மதிமுக திருச்சி தொகுதியை பெற்றது. 

Durai Vaiko: மதிமுகவிற்கு திருச்சி திருப்புமுனையாக அமையுமா? -  துரை வைகோவிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

திருச்சியில் மதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் 

திருச்சி என்றாலே திருப்புமுனையை உருவாக்கும் என்பது திராவிட கட்சிகளுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதிலும் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவரும் தங்களது கட்டுப்பாட்டில் திருச்சியை முழுவதுமாக வைத்துள்ளார்கள். ஆகையால் திருச்சி பொருத்தவரை திமுக தனித்து நின்றாலோ அல்லது கூட்டணி வேட்பாளர்கள் என்றாலும் நிச்சயம் பெரும்பான்மையான வாக்குகள் விசாரித்தில் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் நம்பிக்கையாக உள்ளது. அதிலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருச்சியில் மதிமுக போட்டியிடுகிறது. குறிப்பாக வைகோ அவர்களின் மகன் துரை வைகோ போட்டியிடுவதால் நிச்சயம் மக்களிடையே பெரும் ஆதரவும் கிடைக்கும், தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் என்பது மதிமுகவின் மிகுந்த நம்பிக்கையாக உள்ளது. வருகின்ற தேர்தலில் துரை வைகோ மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என மதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget