Lok Sabha Election 2024: பாமக வேட்பாளர்கள் தொகுதியில் வைக்க போகும் வாக்குறுதி இதுதான்
பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.
பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். ஜிகே.மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக வேட்பாளர்களின் பேட்டி:
1. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திலகபாமா பேட்டி :-
திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக தனக்கு போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ் வாய்ப்பளிப்பத்துள்ளதாகவும், திண்டுக்கல் மக்கள் தனக்கு இத்தேர்தலில் வெற்றி பெற செய்வார்கள் என்றும் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறியுள்ளார். கடந்த மூன்றாடுகளில் திமுக அரசு செய்து மீது மக்கள் கோவத்தில் உள்ளதாகவும், தொழிற்சாலைகள் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
2. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேவதாஸ் பேட்டி:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் கடுக்கா தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
3. ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனேஷ்குமார் பேட்டி:-
தென்பெணையாறு, செய்யாறு நதி நீர் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும்,பட்டு நெசவு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன், மேல் மாசி சிப்காட் விவசாய நிலங்கள் அழிக்காமல் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
4. சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை பேட்டி :-
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என்றும் சேலத்தில் நெசவு தொழிலாளர்கள் அதிகம் என்பதால் சூரத் புடவைகளை விற்பனை செய்யாமல் சேலம் நெசவாளர்களின் புடவைகளை மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்து மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
5. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ம.க ஸ்டாலின் பேட்டி :-
நாடாளுமன்ற தேர்தலில் வேளாண் துறை கல்லூரி கொண்டு வரவும், குடந்தை கோவில் மகா மகம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுப்பேன் என்றும் கும்பகோணத்தை தனி மாவட்ட அறிவிக்க கோரி பாடுபடுவேன் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மக்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார். மயிலாடு துறை மக்களுக்கு தான் பரிச்சையமானவன் என்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வேட்பாளர் நம்பிக்கை