Lok Sabha Election 2024: நெல்லை தொகுதி வேட்புமனு தாக்கலுக்கு தயாராகிய ஆட்சியர் அலுவலகம் & முதல் நாள் தகவல் இதோ..!
முதல் நாளான இன்று 2 மணி வரை நெல்லை தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வேட் மனு தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று புதன்கிழமை காலை 11 மணி முதல் துவங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடமான நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காலையிலேயே காணப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று பெரிய கட்சிகள் எதுவும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆட்சியர் அலுவலக வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வேட்புமனு படிவம் 2A வினை ECI/ECO என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்தலுகான வேட்புமனு படிவம் 2A தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
* காலை 11:00 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
* வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதி.
* 100 மீட்டருக்கு முன்பாகவே வேட்பாளருடன் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன
* வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.
* பட்டியல் பிரிவினர் 12,500 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.
* வேட்பாளர்கள் வரும் பிரதான வழிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படும்..
* வேட்பு மனு தாக்கல் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
* வேட்பு மனு தாக்கலுடன் சொத்து குறித்த பிரமாண பத்திரம் வங்கியின் இருப்பு தொகை நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் குறிப்பிட வேண்டும்.
* வருகின்ற 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
* 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். அதே போல வேட்புமனுக்கள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவினை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று 2 மணி வரை நெல்லை தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.