எலி கூண்டுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு கரூர் சுயேச்சை வேட்பாளர்.. காரணம் தெரியுமா?
கரூர் மாநகராட்சி தேர்தலில் 26 வார்டு பகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் எலி பெட்டியுடன், தனது குழந்தைகளுடன் நூதன முறையில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கரூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்த 26-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ்கண்ணா இன்று கேவிபி நகரில் உள்ள முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபிறகு தனது குழந்தைகளுடன் எலி பெட்டியுடன் அவர் குழந்தைகளுடன் வீடு வீடாகச் சென்று நோட்டீசை வழங்கி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்பொழுது அந்த நோட்டீஸில் முத்தான முதல்நாள் திட்டங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய நிலையில் அதில் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான்பூச்சிகள், 10000 எலிகள் ,100 நாய்களை ஒழித்து சுகாதார நிலையை ஏற்படுத்தி, நான் அயராது பாடுபடுவேன் என நூதன முறையில் தனது திட்டத்தை அறிவித்து 26-வது வார்டு பகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ்கண்ணா தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
கரூர் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலில் சந்தித்துள்ள நிலையில் அதிமுக, திமுக கட்சியினர் வார்டு பங்கீடு முடிந்த நிலையில் ஆங்காங்கே வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 26-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எலிப்பெட்டியுடன் நூதன முறையில் குழந்தைகளுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மேலும், திட்டங்கள் குறித்து சுயச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணணிடம் கேட்டபோது எனது தேர்தல் பிரச்சாரம் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களுக்கும் வேறு,வேறு விதமான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் நாள் திட்டம் மட்டுமே இந்த திட்டம் எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் சின்னம் வழங்கப்பட்ட பிறகு எனது இரண்டாம் கட்ட பிரச்சாரம் தொடங்கும் என கூறினார்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் வேட்புமனுத்தாக்கல் செய்து நூதன முறையில் பல்வேறு பிரச்சாரம் செய்து மாவட்ட மக்களை கவர்ந்துள்ளார். மாநகராட்சி தேர்தலில் தொடர்ந்து மூன்று நாட்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் முதல் நபராக வேட்புமனுத்தாக்கல் தனது குடும்பத்துடன் செய்தார். அதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளர்களின் முதல் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அதிலும் குறிப்பாக பத்துநாள் தேர்தல் பிரச்சாரத்தில் பத்து முத்தான வாக்குறுதிகளை வார்டு மக்களுக்கு தெரிவிக்க இருப்பதால் அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது முதல் நாள் திட்டத்தின் நோட்டீசை எனது பகுதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ளேன். இதை தொடர்ந்து மீதி உள்ள ஒன்பது நாளும் எனது திட்ட நோட்டீசை வீடு வீடாகச் சென்று வழங்கத் திட்டமிட்டு உள்ளேன் என தெரிவித்தார்.