மேலும் அறிய

திருப்பத்தூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! எத்தனை பேர் நீக்கம்? சேர்ப்பு? - முழு விவரங்கள் இதோ!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் எத்தனை வாக்காளர் உள்ளனர் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 11 ஆயிரத்து 599 வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு 28 ஆயிரத்து 927 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 11 ஆயிரத்து 599 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்குவதற்கு முன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 99 ஆயிரத்து 411 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவம் பணிகள் 100% நிறைவு பெற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 2,32,804 வாக்காளர்களும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,06,486 வாக்காளர்களும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 693 வாக்காளர்கள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 689 வாக்காளர்கள் என மொத்தமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 82,672 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றனர். 

மேலும், நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இறந்தவர்கள் கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாதவர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் இரட்டை பதிவு என மொத்தமாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 739 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 

அதனை தொடர்ந்து கோரிக்கை அல்லது ஆட்சேபனை இருப்பின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1202 வாக்குச்சாவடி நிலையங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் அது சம்பந்தமாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெறப்பட்ட கோரிக்கைகளை விசாரணை மேற்கொண்டு தற்போது இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 2,40,220 ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2,33,830 ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,12,631 மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,24,918 என மொத்தமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 4,49,464 ஆண் வாக்காளர்களும் 4,61,996 பெண் வாக்காளர்களும்  மற்றும் 139 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர். எனவே வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு 28,927 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு மொத்தமாக 87 ஆயிரத்து 812 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 9 லட்சத்து 11 ஆயிரத்து 599 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
மழைநீர் வீணாவதைத் தடுக்க மெகா பிளான்: விழுப்புரம் அதிகாரிகளுக்கு கலெக்டர் கொடுத்த கெடு!
மழைநீர் வீணாவதைத் தடுக்க மெகா பிளான்: விழுப்புரம் அதிகாரிகளுக்கு கலெக்டர் கொடுத்த கெடு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget