மேலும் அறிய

உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா? விழுப்புரம் மாவட்ட 2026-ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

விழுப்புரம் மாவட்டம்: இறுதி வாக்காளர் பட்டியலில் 53,873 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு; 2,166 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் -2026 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டார்.

 

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் -2026 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (23.02.2026) வெளியிட்டார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரிலும், மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுரையின் பேரிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (Special Intensive Revision- 2026) பணிகள் நடைபெற்றது. இதில் 1970 வாக்கு சாவடி நிலை அலுவலர்களும், 198 வாக்கு சாவடி மேற்பார்வையாளர்களும், 7453 வாக்கு சாவடி நிலை முகவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2245 நபர்கள் இணைந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 க்கு முன்னதாக 27.10.2025 தேதியின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 8,49,236 ஆண் வாக்காளர்களும், 8,78,011 பெண் வாக்காளர்களும் மற்றும் 243 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 17,27,490 வாக்காளர்கள் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்றதற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் 7,64,377 ஆண் வாக்காளர்களும், 7,80,042 பெண் வாக்காளர்களும் மற்றும் 206 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15,44,625 வாக்காளர்கள் இருந்தார்கள்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள (07 சட்டமன்ற தொகுதிகளில்) வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் முகவரியில் வசிக்காத வாக்காளர்கள்/இடமாற்றம் செய்த வாக்காளர்கள்/ இதர வாக்காளர்களும், இறந்த வாக்காளர்களும் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களும், வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றது.

தற்போது 01.01.2026 தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் 11,845 வாக்காளர்கள் நீக்கப்பட்டும், 53,873 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேற்படி இறுதி வாக்காளர் பட்டியலில் 7,83,288 ஆண் வாக்காளர்களும், 8,03,154 பெண் வாக்காளர்களும் மற்றும் 211 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் (27.10.2025) தேதியின்படி 1970 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. இவற்றில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கப்பட்டு தற்போது 2,166 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், இ.ஆ.ப., திருக்கோவிலூர் சார் ஆட்சியர் திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திரு.ராஜூ, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget