மேலும் அறிய

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது வாக்கை பதிவு செய்தார்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

கரூர் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேல் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது வாக்கை பதிவு செய்தார்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கரூர் லோக்சபா தொகுதி, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் அடங்கியுள்ளது. மேலும் கரூரில், கிருஷ்ணராயபுரம் (தனி) அரவக்குறிச்சி, திருச்சியில் மணப்பாறை, திண்டுக்கல்லில் வேடசந்தூர், புதுக்கோட்டையில் விராலிமலை ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. கரூர் நாடாளுமன்ற தொகுதியில், ஆறு லட்சத்து, 93 ஆயிரத்து, 730 ஆண்கள், எழு லட்சத்து, 35 ஆயிரத்து, 970 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 90 பேர் உள்பட, 14 லட்சத்து, 29 ஆயிரத்து, 790 பேர் வாக்களிக்க உள்ளனர். அதில், ஆண்களை விட, பெண் வாக்காளர்கள், 42 ஆயிரத்து 240 பேர் அதிகம் உள்ளனர்.

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது வாக்கை பதிவு செய்தார்

கரூர் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 1,670 வாக்குச்சாவடிகளில்  9,073 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் இரவுக்குள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்றுவிட்டனர். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்துார், மணப்பாறை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளுக்கு மொத்தம் 8000 மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் 2000 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2167 வாக்காளர் ஓட்டுப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் உள்ளிட்ட சுமார் 96 மேற்பட்ட பொருட்களும் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு GPS கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது வாக்கை பதிவு செய்தார்

காலை 6.00 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7.00 மணி முதல் தொடங்கி மாலை 6.00 மணி வரை  ஓட்டுப்பதிவு  நடக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினர்.  கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget