‛பிறரை குறை சொல்வதால் பாதகம் என்பதை அனுபவமாக உணர்ந்தவன் நான்’ வேட்பாளர்களிடம் ராஜேந்திரபாலாஜி உருக்கம்!
‛‛யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கைக் கேளுங்கள்,’’
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியது:
‛‛தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் முக்கியமான களப்பணிகளை இன்றில் இருந்து ஆற்ற வேண்டியுள்ளது. தொழில் அதிபர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை தொழிலாளர்கள் பாட்டாளிகள் உழைப்பாளிகளை அவர்களை நம்பி மட்டுமே இந்த அதிமுக எம்ஜிஆரால் துவங்கப்பட்டுள்ளது . சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்கக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது
ஆட்சியில் இல்லை அதிகாரத்தில் இல்லை என்ற எண்ணம் இல்லாமல் சீட்டுக்காக போட்டி போடக்கூடிய இயக்கம் அதிமுக . விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தெம்புடனும் ,திராணியுடன் இருக்கிறது. ஒரு அற்புதமான இயக்கத்தை ஓபிஎஸ் இபிஎஸ் கட்டமைத்துக் கொண்டு வருகிறார்கள் அவர்கள் சொல்லும் வழியில் நான் பயணித்து வருகிறேன்.
அனைத்து வேட்பாளர்களையும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆக எண்ணுங்கள். மக்கள் அனைவருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது. அதிமுக வெல்வது நிச்சயம், மாநகராட்சியை வெல்வது நிச்சயம். ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டும் தான் மாநகராட்சிகளுக்கு பணம் மற்றும் பதவிகள் கிடைக்கும் என்ற எண்ணம் தவறானது மத்திய அரசின் மூலம் கிடைக்கும் தொகையே பல கோடி வரும்.
இங்கு மாநகராட்சி வரவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிகளில் பணிகள் செய்தோம். சிவகாசியில் மாநகர பணிகள் சாலைப் பணிகள், புதிய பேருந்து நிலையம், கல்வி மாவட்டமாக அறிவித்து என அனைத்தையும் செய்து இந்த கே டி ராஜேந்திர பாலாஜி மட்டுமே. சாலைப் பணிகள் ஒரு சில பணிகளுக்காக அனைத்து நிகழ்வின் வந்துவிட்ட நிலையில் கொரானா பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் பணிகள் தொடங்கவில்லை இதை ஒரு சிலர் கையில் எடுத்துக் கொண்டதால் நமக்கு சரிவு ஏற்பட்டது.
மாநகராட்சி கட்டிடம், மண்டலங்கள் கட்டிடம் என அனைத்தும் அதிமுக கட்டிக் கொடுத்தது. திருத்தங்கல் பகுதி என்றாலே தண்ணீர் பிரச்சனை இருக்கும். அதனால் பெண் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.
அனைத்து வேட்பாளர்களும் பக்குவமாக ஓட்டு கேளுங்கள். மற்றவர்களை குறை சொல்லி ஓட்டு கேட்பதால் நமக்கு அது பாதகம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கைக் கேளுங்கள்,’’ என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்