மேலும் அறிய

ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழிற்சாலைகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

பாஜக குறித்து சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம், பாரதிநகர், சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நஞ்சுண்டாபுரத்தில் பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “வரக்கூடிய 19ஆம் தேதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொருத்தவரைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். என்ன காரணம் என்று கேட்டால்? கொடுத்து அழகு பார்த்தது திராவிட முன்னேற்ற கழகம், கொடுப்பதை தடுப்பது பாரதிய ஜனதா கட்சி, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதோ செய்தது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று பொதுமக்கள் அனைவரும் இன்று நல்ல திட்டங்களை கொடுத்து பொதுமக்களுக்கு அழகு பார்த்துக்  கொண்டிருப்பது திராவிட மாடலின் தந்தை முதலமைச்சர் அவர்கள்.

ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு

திராவிட மாடல் அரசு மகளிர்க்கு இலவச பேருந்து, கலைஞர் உரிமை தொகை மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் பாஜக குறித்து சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழிற்சாலைகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளால் பொருளாதாரம் நன்றாக இருந்தது. எப்பேர்பட்ட கோவையாக இருந்தது? வளமான கோவையாக இருந்தது. பணம் புழக்கம் இப்போது குறைந்து விட்டது. அதனால்தான் முதல்வர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தான், பெண்களுக்கு உரிமைத்தொகை உள்ளிட்டவைகள் வழங்கினார். எனவே தான் கொடுப்பவர்களுக்கும், தடுப்பவர்களுக்கும் ஏற்படும் யுத்தம் தான் இந்த தேர்தல். பாஜக நமக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் நமக்கு கொடுத்தது எல்லாம் விலைவாசி உயர்வு மட்டுமே. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் வாக்களியுங்கள்.

பாஜக பொய் சொல்கிறது

நான் உள்ளூரை சேர்ந்தவன், பாஜக வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர். தாய்மார்கள் இதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதிக பொய் பேசுவார்கள். அதை செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என பொய் பேசுவார்கள். அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது. பிரதமர் ஒரு வாக்குறுதி கொடுத்தார் பெண்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என சொன்னார். கொடுத்துட்டாரா? இப்படி கவர்ச்சிகரமான பொய்களை சொல்லிக்கொண்டு போவார்கள். அதனால் எதுவும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்கள். இதுதான் இன்று இருக்கக்கூடிய நிலை. இந்தியாவில் 10 ஆண்டுகள் நடந்த  அவருடைய ஆட்சி என செய்தார்கள் என எண்ண வேண்டும். இது எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வரக்கூடிய தேர்தலை பொருத்தவரைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும். அதேபோல், அதிமுகவை  பொறுத்தவரை அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. எதற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அவர்களுக்கும், பிஜேபிக்கும் ரகசிய உறவு இருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகு சேர்ந்து கொள்வார்கள். அதிமுக - பாஜகவின் கள்ள உறவு புரிந்துகொள்ளுங்கள், 10 ஆண்டுகளாக நாட்டை சீரழித்த பாஜக - அதிமுகவிற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம். உதயசூரியனை வெற்றி பெற செய்வோம்” எனக் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget