மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

’’ஒரு இயக்கம் வலிமையாக இருக்க அஸ்திவாரமாக இருப்பது தான் இந்த உள்ளாட்சி தேர்தல். இதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும்’’

கிராமப்புறங்களில் அதிமுகவிற்கு  வெற்றி என்பது நல்ல விளைச்சலில் உள்ளது. அதை அறுவடை செய்யும் பணிகளில் நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்று சங்கரன்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து போட்டியிடுகின்ற வேட்பாளர், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தென்காசியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனை சாக்காக வைத்து தி.மு.கவினர் தேர்தலை தள்ளி வைக்க நீதிமன்றம் வரை சென்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தான் தி.மு.க தேர்தலை அறிவித்துள்ளது. இன்றைக்கு தேர்தலை சந்திக்க கூடிய சூழ்நிலையில் உள்ளோம். தென்காசி அதிமுக-வின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டிய சூழலில் உள்ளோம். நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் குறைந்த வாக்குகளில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நகர்புறங்களில் மட்டுமே வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
உள்ளாட்சி தேர்தல்  கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி. கிராமப்புறங்களில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே கிராமங்களில் நல்ல விளைச்சல் உள்ளது. அறுவடை பணிகளில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். எத்தனையோ துறைகள் இருந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி சேவை செய்கின்ற வாய்ப்பு உள்ளாட்சி துறையில் மட்டுமே உள்ளது. உள்ளாட்சி துறையில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வாக்குகளை பெற வேண்டும். ஒரு இயக்கம் வலிமையாக இருக்க அஸ்திவாரமாக இருப்பது தான் இந்த உள்ளாட்சி தேர்தல். இதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும்.
 
அதிமுக ஆட்சி காலத்தில் கிராமப்புறங்களுக்கு அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், இரு சக்கர வாகனம்  எண்ணற்ற திட்டங்களில் விதிமுறைகளை காரணம் காட்டி மக்கள் பயன் பெறாத வகையில் திட்டங்களை கைவிட்டு விட்டனர் .
 
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்ம் அரசு தான் தி.மு.க. தேர்தல் நேரத்தில் தி.மு.க  525 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகிறது. எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயருக்கு 2, 3 திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
 
ஆகவே ஒவ்வொரு வாக்கும் முக்கியம். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும். வாக்களித்த பிறகு வாக்குப்பெட்டிக்கு சீல் வைப்பதில் இருந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் வரை நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.
 
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வ மோகன் தாஸ் பாண்டியன், மனோகரன், P.G.ராஜேந்திரன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget