மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!
kanchipuram lok sabha constituency " காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார் "
![பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..! Actress Vindhya campaigned in support of AIADMK candidate for Kanchipuram parliamentary constituency பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/a2bb82d4d2a112bea056c7cfdd04a6251712285970179113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை விந்தியா பிரச்சாரம்
திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம். திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்ட நடிகை வித்யா. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார் .
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகர் அவர்களை ஆதரித்து திரைப்பட நடிகையும் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா திமுக மற்றும் பாஜக மீது கடும் விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக - பாஜக இரண்டும் ஒன்று
அப்போது பேச்சு தொடங்குவதற்கு முன்பு திமுகவிடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்டபோது . ஆனால் பாஜக மாற்றுக் கட்சி அல்ல ஏமாற்றும் கட்சி, திமுக விற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. திமுக பயங்கரமாக பொய் சொல்லும் பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும், திராவிட மாடல் என்று ஏமாற்றும் திமுகவையும் இந்திய மாடல் என்று ஏமாற்றும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் . திமுக கடவுளை திட்டிக்கொண்டே சாமி கும்பிடும். ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசனை செய்வார் .மோடி மதத்தை மட்டுமே பற்றி யோசனை செய்வார்.
திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்
ஸ்டாலின் மகன் மகள் மருமகனுக்கு பினாமி ,மோடி அம்பானி அதானிக்கு பினாமி. திமுக மக்களிடம் மட்டுமே திருடுவார்கள். பாஜக மாநிலங்களை மட்டுமே திருடுவார்கள். திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட் ,பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். இந்த தேர்தலில் திருந்தாத பாஜகவையும் திருட்டு திமுகவையும் ஒழித்துக் கட்டுவதற்கு பொதுமக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க வேண்டும். சதிகார திமுகவையும் சர்வாதிகார பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் என பேசினார்.
பிம்பிளிக்கி பிளாப்பி
மேலும் பாஜக கூட்டணியை விமர்சித்து பேசிய அவர் தெரிவித்ததாவது : ஏன் இருக்கிறோம் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல், ஒரு கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள் என்றால் அது பாஜக கூட்டணி தான். ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே கிடையாது, ஒருத்தருக்கு கொள்கைக்கும் இன்னொருத்தர் கொள்கைக்கும் சம்பந்தமே கிடையாது ஆனால் அவர்கள் கூட்டணியாம். ஜிகே வாசன், பச்சை முத்து ,அன்புமணி மற்றும் இரண்டு மூன்று சுயேட்சைகள் இவர்கள் அனைவரும் மோடி பக்கத்தில் வரிசையாக நின்றிருந்தார்கள். அதை பார்த்தவுடன் எனக்கு பாண்டியராஜன் படத்தில் வரும் பிம்பிலிக்கா பிளாப்பி காமெடி தான் நினைவுக்கு வந்தது. இவர்களெல்லாம் தேர்தல் முடிந்து அதற்குப் பிறகு என்ன ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை.
" என் கட்சியை நீங்க வச்சுக்குங்க "
சரத்குமார் பிஜேபியில் சேருவார் என எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் எதிர்பார்ப்பு கேட்டேன். அதன் பின்னால் ஒரு கதை இருப்பதாக கூறினார் சரத்குமார் அண்ணாமலையிடம் உங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், சிபி எவ்வளவு ரேட் எவ்வளவு என்று கேட்டார். அண்ணாமலை கட்சி எவ்வளவு என கேட்டதால் அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடித்திருந்தது. விருதுநகர் நான் வச்சிக்கிறேன் என் கட்சியை நீங்க வச்சுக்குங்க கொடுத்துட்டாரு, ஒரு கட்சி பிஜேபியில் சேர்ந்து இருப்பதால் அண்ணாமலை மகிழ்ச்சியில் இருந்த பொழுது, கட்சியிலே புருஷன் பொண்டாட்டிகள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். எனக்கு இவர்களை பார்த்ததைவிட டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரை பார்த்ததில் தான் பாவமாக இருந்தது. ஒரு சீட்டு கேட்ட டிடிவி தினகரனை, அவர் தலையில் இரண்டு சீட்டை கட்டி விட்டார்கள் என்று விமர்சனம் செய்தார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion