மேலும் அறிய

Part Time Teachers: பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய மறுப்பா? பணி நிரந்தரம் வழங்குக- ராமதாஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி என்றும் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்  வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி என்றும் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்  வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

''தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக பணியமர்த்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக  பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாதம்  ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை  அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.10,000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருபவர்கள். அந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு அந்தந்த மாத செலவுகளை சமாளிக்க முடியாது எனும் போது, ஆண்டுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

குறைந்தபட்ச கோரிக்கைக்கே மறுப்பு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைத்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று பல முறை உறுதியளித்தும் கூட, அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த ஆண்டாவது தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த மாதம் சென்னையில்  அவர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போது அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்ததால் தங்களின் கனவுகள் நனவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், மே  மாத ஊதியம் என்ற குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட ஏற்க அரசு மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.

பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள். பணி அமர்த்தப்படும்போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது.பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால்தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது. இது அவர்களுக்கு போதுமானது அல்ல.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்நிலையையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். முதல்கட்டமாக,  அவர்களுக்கான மே மாத ஊதியத்தை உடனடியாக  வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Maruti Price Hike: இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Udhayanidhi vs Vijay : சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
Embed widget