Vels University : சிறப்பு விருந்தினராக கோபிநாத்.. சிறப்பாக நடந்த வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 2024 மாணவர் சேர்க்கை தொடக்க விழா..
கோபிநாத் தனது உரையில், வெற்றியை அடைவதில் பொறுப்பு, அனுசரிப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
![Vels University : சிறப்பு விருந்தினராக கோபிநாத்.. சிறப்பாக நடந்த வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 2024 மாணவர் சேர்க்கை தொடக்க விழா.. Vels University 2024 Induction Ceremony Gopinath as Special Guest Vels University : சிறப்பு விருந்தினராக கோபிநாத்.. சிறப்பாக நடந்த வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 2024 மாணவர் சேர்க்கை தொடக்க விழா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/081459e5f0b79f2a4635b8c6552991b11723180494119332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (விஸ்டாஸ்- VISTAS) இந்த ஆண்டு புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களை பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் வரவேற்றது.
இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான VISTAS, அதன் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான தொடக்க விழாவை நடத்தியது. ஏறக்குறைய 6000 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொலைக்காட்சி தொகுப்பாளர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமைக்கு பெயர் பெற்ற ஊடகவியலாளரான கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். VISTAS நிறுவன வேந்தர் ஐசரி கே. கணேஷ், துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோபிநாத் தனது உரையில், வெற்றியை அடைவதில் பொறுப்பு, அனுசரிப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
VISTAS-ன் நிறுவனர் ஐசரி கே. கணேஷ், மாணவர்களை அன்புடன் வரவேற்று, பல்கலைக்கழகத்தின் வளாக வசதிகளைப் பயன்படுத்தி அவர்களின் முழுத் திறனையும் அடைய ஊக்கப்படுத்தினார். கல்வி மட்டுமே அல்லாமல் விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் கவனம் செலுத்த அறிவுரை வழங்கினார்.
பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட முழுமையான கல்வி
வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், ’’வழக்கமான பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட முழுமையான கல்வியை வழங்குவதில் VISTAS எப்போதுமே உறுதிகொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் இதர குழுக்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல வேலையைப் பெற முயற்சிக்க வேண்டும்’’ என்றார். விழாவிற்கு வருகை தந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
VISTAS: ஓர் அறிமுகம்
2008ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மத்தியக் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இளநிலைப் படிப்புகள் முதல் ஆராய்ச்சிப் படிப்பு (Ph.D) வரையிலான திட்டங்களை VISTAS வழங்கி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)