UGC Guidelines: இணையதளத்தில் இதையெல்லாம் கண்டிப்பாக வெளியிடணும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள், தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று யுஜிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவையான அனைத்து விவரங்களையும் வெளிப்படையாகப் பொதுவெளியில் பதிவேற்றம் செய்வதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் பொது மக்களும் உரிய விவரங்களை அறிய முடியும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளதாவது:
பொது வெளியில் தகவல் பகிர்வு இருப்பது என்பது முக்கியமான ஆதாரமாக இருக்கும். மாணவர்கள், பெற்றோர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், வருங்கால மாணவர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், அங்கீகார முகமைகள், முன்னாள் மாணவர்கள் போன்ற உயர்கல்வி அமைப்புடன் பங்குகொண்டவர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து தகவல்களைப் பெறுவது அவசியம் ஆகிறது.
லாகின், முன்பதிவு என்று எதுவும் இருக்கக்கூடாது
ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பங்குதாரர்களுக்கு பொருத்தமான தகவல்களை வெளியிட, ஓர் இணையதளத்தை பராமரிக்க வேண்டும். லாகின், முன்பதிவு என்று எதுவும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தகவல்களைப் பார்வையிடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். எளிதில் தகவல்களைப் பெற ‘Search’ வசதி இருக்க வேண்டும்.
உயர் கல்வி நிறுவனம் பற்றிய தகவல்கள் (About HEI)
இதில், உயர் கல்வி நிறுவனம் குறித்த விரிவான விவரங்கள், ஆண்டு அறிக்கை, அங்கீகாரம், தரவரிசைப் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும்.
நிர்வாகம் (புகைப்படம், தொடர்பு எண்களோடு)- Administration (Profiles with photographs and contact details)
* வேந்தர்
* இணை வேந்தர்
* துணைவேந்தர்
* சார்பு துணைவேந்தர் (பொருந்தக்கூடிய இடங்களில்)
* பதிவாளர்
* கல்லூரி முதல்வர் (பொருந்தக்கூடிய இடங்களில்)
* நிதி அதிகாரி
* தேர்வுக் கட்டுப்பாட்டாளர்
* தலைமை விஜிலென்ஸ் அதிகாரி
* எக்சிகியூட்டிவ் கவுன்சில்/ ஆளுநர் வாரியம் எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும், மேலாண்மை வாரியம், கல்வி கவுன்சில், படிப்புகள் வாரியம், நிதி குழு - அமைப்பு மற்றும் விவரங்களுடன் உறுப்பினர்கள்
* உள் புகார் குழு
* கல்வித் தலைமை (பள்ளிகள்/ துறைகள்/ மையங்களின் துறைத் தலைவர்கள்/ டீன்)
அகாடமிக்ஸ் விவரம் (Academics)
மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் (Admissions & Fee)
ஆராய்ச்சிப் பணிகள் (Research)
மாணவர்கள் வாழ்க்கை (Student Life)
முன்னாள் மாணவர்கள் குறித்த விவரங்கள் (Alumni)
தகவல் பலகை ( Information Corner)
புகைப்பட கேலரி ( Picture Gallery)
தொடர்புகொள்ள ( Contact us)
மேலே குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழுமையான விவரங்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/7822003_GUIDELINES-ON-PUBLIC-SELF-DISCLOSURE-BY-HIGHER-EDUCATION-INSTITUTIONS.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.