மேலும் அறிய

UGC NET Result 2022: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது? பார்ப்பது எப்படி? விவரம்

ஆசிரியராகப் பணியாற்ற நடத்தப்படும் யு.ஜி.சி. நெட் தேர்வின் 2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவிப் பேராசிரியர் ஆக முடியும். இதற்கு வயது வரம்பு எதுவுமில்லை. எனினும் 30 வயது வரை மட்டுமே ஜேஆர்எஃப் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். 

நெட் தேர்வு என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

கொரோனா தொற்றால் தள்ளிப்போன சுழற்சி

கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக (December 2021 and June 2022 (Merged Cycles)) நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தி நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியாகின. 

இந்த நிலையில் கொரோனா தொற்றால் தள்ளிப்போன ஜூன், டிசம்பர் மாத சுழற்சியைச் சரிசெய்வதற்காக,  2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. குறிப்பாக பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. 83 பாடங்களுடன், இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge Systems) என்னும் பாடம் புதிதாக இருந்த முறை சேர்க்கப்ப்பட்டது. 

32 ஷிஃப்டுகளில் நடத்தப்பட்ட தேர்வை 8,34,537 தேர்வர்கள் எழுதினர். நாடு முழுவதும் 186 நகரங்களில் 663 தேர்வு மையங்களில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து யு.ஜி.சி. நெட்  தேர்வின் தற்காலிக விடைக் குறிப்பு, ஆட்சேபனை, இறுதி விடைக் குறிப்பு ஆகியவற்றை மார்ச் மாதத்தில் யுஜிசி வெளியிட்டது.

இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வின் (University Grants commission- National Eligibility Test -(ugc net)) 2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ளன. 

பார்ப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய தளத்துக்குச் செல்ல வேண்டும்.

* அதில் UGC NET December 2022 தேர்வு முடிவுகள் என்னும் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.  

தேர்வர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget