ஒரே பள்ளியில் 17 இரட்டையர்களுக்கு பள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்... நெகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்
தேனியில் ஒரே பள்ளியின் பயிலும் 17 இரட்டையர் மாணவ மாணவியர்கள்..! பூ கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

உலக இரட்டையர் தினத்தை முன்னிட்டு, தேனியில் ஒரே பள்ளியில் பயிலும் 17 இரட்டையர் மாணவ, மாணவியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினர்.
தேனி மாவட்டம், தேனி - மதுரை பிரதான சாலையில் மேரி மாதா சிபிஎஸ்சி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று உலக இரட்டையர் தின விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உலக இரட்டையர் தினத்தை முன்னிட்டு இப்பள்ளியில் பயிலுகின்ற 17 ஜோடி இரட்டையர்கள் என 34 மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இரட்டையர் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று காலை பள்ளி துவங்குவதற்கு முன்பாக இறை வணக்கம் செலுத்தும் நேரத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதத்தில் மேடையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

பின்னர், இரட்டையர்களான மாணவர்களுக்கு மலர் கொத்துக்கள் கொடுத்து கேக் வெட்டி கரகோஷம் எழுப்பி கொண்டாடப்பட்டது. பின்னர் அவர்களை ஆசிரியர்கள் சக மாணவர்கள் கௌரவித்து பாராட்டி, இரட்டையர் தினத்தை கொண்டாடி தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் ஒரே பள்ளியில் பல்வேறு வகுப்புகளில் பயின்று வரும் 17 இரட்டையர்களை கெளரவிக்கும் வகையில், உலக இரட்டையர் தினத்தை கொண்டாடுவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், அவர்களுக்கான திறமைகளை குறித்து எடுத்துரைத்து, கல்வியிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டுமென பல்வேறு உதாரணங்களை எடுத்துரைத்து அறிவுரை வழங்கி ஆசிரியர்கள் தங்களது இரட்டையர் தின விழா வாழ்த்துகளையும், மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

மேலும் பள்ளியில் பயிலுகின்ற 34 மாணவ, மாணவியர்களின் புகைப்படங்களை காலண்டரில் அச்சிட்டு, இரட்டையர்களான மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசாகவும் பள்ளி நிர்வாகம் வழங்கியது. இறுதியாக பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இரட்டையர் தினம் நினைவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு ஒரே பள்ளியில் பயிலும் 17 இரட்டையர் மாணவ, மாணவியர்களுக்கு சக பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரட்டையர் தினத்தை பூங்கொத்துகள் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியது. மக்கள் மத்தியில் தேனி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அருட்தந்தை. ராபின்ஸ் ஜேக்கப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக காவல்துறையில் ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.





















