மேலும் அறிய

விக்ரமுக்கு சீயான், எனக்கு கிச்சா.. முதல் படம் அட்டர் பிளாப்.. மனம் திறந்த கிச்சா சுதீப்

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் கிச்சா சுதீப் தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கல்லூரி படிக்கும் பாேதே சினிமா மீது தீராத ஆர்வம், கண்டிப்பான தந்தை, நடித்த முதல் படமே பெரும் தோல்வி, தொடர் தோல்வியை சந்தித்து சீரியல் பக்கம் சென்று மீண்டும் வாழ்வு கொடுத்த தமிழ் படம். படப்பிடிப்பில் உடைந்த கால் என வலிகளோடு போராடி முதல் வெற்றியை ருசித்த அனுபவத்தை கனத்த இதயத்தோடு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் பகிர்ந்திருக்கிறார். இதில், பல சுவாரஸ்யமான அனுபவங்களையும் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்திருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இன்ஜியனிரிங் படிப்பு

பிரபல நடிகர், சினிமா விமர்சகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் சித்ரா லட்சுமணன். இவர், திரைப்பட நடிகர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் கிச்சா சுதீப்பை சந்தித்து பேட்டி எடுத்தார். அப்போது பேசிய கிச்சா சுதீப், சார் நான் 12ஆவது படிக்கும் போதே சினிமாவில் நடிக்கனும் என்ற ஆசை வந்திடுச்சு. படம் பார்க்க ரொம்ப பிடிக்கும். சினிமா இல்லாட்டி கிரிக்கெட் பிளேயரா வரணும் ஆசை. ஆனால், எங்க அப்பா ரொம்ப கண்டிப்பா இருந்தாரு. இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்துவிட்டார். என்னடா இப்படி ஆகிடுச்சு ஃபீல் பண்ணேன். 

நடித்த படங்கள் ஓடலை

கல்லூரி முடிச்சுட்டேன். அப்பாகிட்ட சினிமாவில் நடிக்கனும் சொல்றேன் விடலை. சரி அப்புறம் கோப்பி சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். அவர் தான் சார் என்னை பார்த்து நீ ஏன் நடிக்கக் கூடாது. நடிக்க ட்ரை பண்ணு சொன்னார். அவர் சொன்னதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கலை. நடிக்கலாம் முடிவு பண்ணேன். எனக்குலாம் யார் வாய்ப்பு கொடுப்பாங்க அப்படிதான் நினைத்தேன். நான் நடிச்ச முதல் படமே ட்ராப். 2வது படமும் ட்ராப். நான் நடிச்சு முழுமையாக வெளியே வந்த 3வது படம் அட்டர் பிளாப் சார். என்னடா இது அப்படின்னு நினைச்சேன். நடிப்பு சரியா வரலைன்னு சீரியல் பக்கம் போனேன். 

சீரியலில் நடித்தேன்

அங்கே போனா துணை நடிகர் கதாப்பாத்திரம். சரி நடிப்பு நமக்கு வரலை இதையாவது நல்லா பண்ணனும் நடிக்க தொடங்கிட்டேன். அந்த டைம்ல தான்  தமிழில் ஒரு படம் பயங்கரமா தியேட்டரில் ஓடிட்டு இருக்கு. ஆனால், அந்த படம் பயங்கர சிக்கலில் தியேட்டரில் 2 முறை வெளியாகி அதுக்கப்புறம் பிக் அப் ஆகுது. நான் அந்த படத்தை பார்த்ததும், இந்த படத்தை கன்னட ரீமேக்ல நான் நடிக்க கூடாதுன்னு நினைத்தேன். அந்த படம் தான் விக்ரம் சார் நடிச்ச சேது. தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது. 

கிச்சா சுதீப் மறக்க முடியாது சார்

இப்பவரைக்கும் கிச்சா என்ற பெயர் எனக்கு மறக்க முடியாத வாழ்க்கை சார். கிச்சா படத்தில் நடிக்கும் பாேது எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அந்த வலியோடதான் கிச்சா படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு போறேன். யாருமே இல்லை. தியேட்டர் மேனேஜர் என்னை பார்த்து வாழ்த்துகள் சார் சொன்னாரு. அப்ப நம்பலை ஒரு ரசிகர் நான் நடந்து வருவதை பார்த்ததும் என் பெயரை மறந்து நீ தான கிச்சா என சொல்லி கொண்டாடுனாங்க. அப்போ உச்சத்துக்கு போனது தான் சார் இப்ப வரைக்கும் நடிகராக என் பயணம் தொடருது என கிச்சா சுதீப் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget