மேலும் அறிய

TNPSC Free Coaching: குரூப் 4 தேர்வுக்கு இலவச வகுப்புகள் - அம்பேத்கர் கல்வி மையப் பயிற்சியின் முழு விவரம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாக அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாக அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப் 4 தேர்வு ‌ஜூலை 24 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து, விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது. அரசின் அறிவிப்பில் 7,301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதனை அடுத்து மாணவர்களுக்கு குரூப் 4 போட்டித் தேர்வுக்கு  இலவசப் பயிற்சியளிக்க டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப் 2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப் 4 வகுப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது‌.

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த அம்பேத்கர் கல்வி மையம் திட்டமிட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு எட்டு வார காலமே பயிற்சிக்கான அவகாசம் உள்ளதால்  பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். குறிப்பாக வகுப்புகள், மாதிரித் தேர்வுடன் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவர். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த வகுப்புகளை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருகிறது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வழிகாட்டுதல் தேவைப்படும் கிராமப்பற மாணவர்கள், வீட்டிலிருந்தே பயிற்சி எடுத்தவர்கள், பயத்தினால் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் இந்த வகுப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாக பயிற்சிக் களத்தில்  கிடைத்த முன் அனுபவங்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1200-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.

TNPSC Free Coaching: குரூப் 4 தேர்வுக்கு இலவச வகுப்புகள் - அம்பேத்கர் கல்வி மையப் பயிற்சியின் முழு விவரம்!

சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேர்விற்காகப் படித்திருந்து கூடுதலாக வழிகாட்டுதல் தேவைபடும் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.  வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  வகுப்புகள் நடக்கும். 

அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மாணவர்களுக்காக கோயம்புத்தூரிலும், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் வகுப்பெடுக்க விருப்பம் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்ததன் நகலை (Xerox copy),, கட்டாயமாக உடன் கொண்டு வர வேண்டும். 

மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முழுமையாகப் பங்கேற்று, தேர்வெழுதும் முழுத் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் உண்டு (இலவசம்தானே என்பதற்காகச் சிலர் ஒரு வகுப்பிற்கு வந்து மறு வகுப்பிற்கு வராமல் போகிறார்கள். அத்தகைய நபர்கள் பணம் செலுத்தும்போது அதன் முக்கியத்துவத்தை அறிந்து முடிவுகளை மேற்கொள்வார்கள். அதற்காகத்தான் பதிவுக் கட்டணம். மற்றபடி வசதி இல்லாதவர்களுக்கு அது கட்டாயம் அல்ல.)

பயிற்சி நடைபெறும் இடம்: 

சிஐடியு அலுவலகம்,
நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரஹாரம், 
ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.

பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

சென்னை மையம்: கங்காதரன் -  94442 14696
வாசுதேவன் - 94446 41712

கோயம்புத்தூர் மையம்: சுரேஷ் - 94881 55191

கூடுதல் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் 

வாசுதேவன்- 94446 41712.

இவ்வாறு அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget