மேலும் அறிய

TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் வரை ஊதியம், 6,244 பணியிடங்கள்: இன்னும் 4 நாட்கள்தான்- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம், அரசுத் துறைகளில் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 

2022 தேர்வு

இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பல்வேறு கட்ட தாமதங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு 

தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சமூகப் பிரிவுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கல்வித் தகுதி 

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்னும் 4 நாட்கள்

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. அதாவது தேர்வர்கள் பிப்.28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் வரை ஊதியம், 6,244 பணியிடங்கள்: இன்னும் 4 நாட்கள்தான்- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் tnpscexams.in  என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு உள்ளே செல்லவும்.

* முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள், அதற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்தபிறகே விண்ணப்பிக்க முடியும். 

* டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை முழுமையாகக் காண: https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக கூறினால் நடவடிக்கை” அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலைThirumavalavan | ”ஆதவ் கட்டுப்பாட்டில் நானா?திமுகவை பார்த்தால் பயமா?” திருமா ஒப்புதல் வாக்குமூலம்Aadhav Arjuna | ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் மேடையில் பேசப்போகும் அரசியல் உற்றுநோக்கும் திமுக! | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக கூறினால் நடவடிக்கை” அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Chennai:
Chennai: "ஒரு வருஷத்துக்கு கவலை வேண்டாம்" சென்னைக்கு வராது தண்ணீர் பஞ்சம் - அடித்துச் சொல்லும் அதிகாரிகள்
அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்ன வார்த்தை : நினைவு தினத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் 
அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்ன வார்த்தை : நினைவு தினத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் 
அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்! 
அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்! 
TVK Vijay: திருமா புறக்கணித்த விழாவில் விஜய்! இன்று என்ன பேசப்போகிறார் தளபதி? உற்றுப்பார்க்கும் தி.மு.க.
TVK Vijay: திருமா புறக்கணித்த விழாவில் விஜய்! இன்று என்ன பேசப்போகிறார் தளபதி? உற்றுப்பார்க்கும் தி.மு.க.
Embed widget