TNPSC Group 3 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 15.09.2022 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 தேர்வுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியானது.
இந்த பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு, கொள்குறி வகையில் நடைபெற உள்ளது. தேர்வு ஜனவரி 28 அன்று முற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASH BOARD) மூலமாக மட்டுமே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய முடியும். எனினும் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
குரூப் 3 தேர்வு; ஓர் அறிமுகம்
1.கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை
2.பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை
காலி இடங்கள்- 15
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு , பட்டப்படிப்பு*
கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)
தேர்வு தேதி
ஜனவரி 28 ஆம் தேதி, முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
ஊதிய விவரம்
ரூ.20,900 முதல் ரூ.75,900 வரை
தேர்வு முறை
கட்டாய தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு / பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு என்று 2 கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். இதில் குறைந்தபட்சமாக 90 மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
கூடுதல் தகவல்களுக்கு
தமிழ் மொழியில் அறிக்கை:26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)
ஆங்கில மொழியில் அறிக்கை 26_2022_CCSE_III_Notfn_Eng.pdf (tnpsc.gov.in)
இதையும் வாசிக்கலாம்: JEE Main 2023 Admit Card: இன்று வெளியாகும் ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட்; பதிவிறக்குவது எப்படி? https://tamil.abplive.com/education/url-jee-main-2023-admit-card-expected-today-at-jeemain-nta-nic-check-details-97288
இதையும் வாசிக்கலாம்: பசுமைப் பள்ளி திட்டம்... குதிரை வண்டியில் சென்று தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி https://tamil.abplive.com/education/green-school-project-minister-anbil-mahesh-poyyamozhi-who-started-in-a-horse-carriage-97120