பசுமைப் பள்ளி திட்டம்... குதிரை வண்டியில் சென்று தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சூழலியல் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் பசுமைப் பள்ளி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவாரூரில் தொடங்கி வைத்தார்.
சூழலியல் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் பசுமைப் பள்ளி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவாரூரில் தொடங்கி வைத்தார்.
சூழலியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்த பசுமைப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் அன்பில் அறிவித்தார். அதையடுத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பசுமைப் பள்ளி திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், குதிரை வண்டியில் சென்ற அமைச்சர் அன்பில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் தேர்தலில் விதைகள் அடங்கிய மஞ்சப்பை தொகுப்புகளையும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உயர் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாரட் வண்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ்https://t.co/wupaoCzH82 | #AnbilMaheshPoyyamozhi #DMK #Pongal pic.twitter.com/375DWBodNa
— ABP Nadu (@abpnadu) January 19, 2023
திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ’’தொழில்பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தத் திட்டமிட்டோம். அதன் ஒரு பகுதியாக விவசாயக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் #School #Students #Education #Teachers #GovtSchools #TNSED #TNGovtSchools #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh pic.twitter.com/5n8K1sqHOi
— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) January 20, 2023
அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ’’வேளாண் ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளது. பசுமை பள்ளி திட்டத்தின்படி தொழிற்கல்வி பாடம் கற்றுத்தரப்படும் பள்ளிகளில், வளாகத்துக்கு உள்ளாகவே வேளாண் ஆய்வகம் அமைக்கப்படும். சிறு குளத்தோடு கூடிய பசுமைக் குடிலும் பயிரிடுவதற்கான நிலமும் வேளாண் ஆய்வகத்தில் இருக்கும்.
நாட்டிலேயே முதல்முறையாக தொழில் கல்வியின் ஒரு பகுதியாக இந்த நிலையான வேளாண் ஆய்வகங்கள் தொடங்கப்படுகின்றன. சோலார் பேனல்கள் மூலம் விவசாயத்துக்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கப்படும். முதல் கட்டமாக 500 பள்ளிகளில் வேளாண் ஆய்வகங்கள் தொடங்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளி என்றில்லாமல், உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விவசாயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்: JEE Main 2023 Admit Card: இன்று வெளியாகும் ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட்; பதிவிறக்குவது எப்படி? https://tamil.abplive.com/education/url-jee-main-2023-admit-card-expected-today-at-jeemain-nta-nic-check-details-97288