மேலும் அறிய

TNPSC Group 1: ரூ.2.05 லட்சம் ஊதியம்; டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி, 1சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி- எப்படி?

TNPSC Group 1B 1C Notification 2024:

தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 22) கடைசித் தேதி ஆகும். தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். 

தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது.  இந்த நிலையில் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) – 21 பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்துக் காணலாம். 

வயது வரம்பு

உதவி ஆணையர் – 34 வயது (இந்து மதத்தினர் மட்டும்)

பிசி, பிசி முஸ்லிம்கள், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு - 39 வயது

கல்வித் தகுதி

* ஒரு பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு முடித்த பட்டம் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு அல்லது

* 3 ஆண்டுகளுக்கும் குறையில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லது ப்ளீடர் பணி

* இந்து சமய அறநிலையத் துறையில் தலைமை கிளார்க் அல்லது மேலாளர் அல்லது கண்காணிப்பாளர் அல்லது கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3 அல்லது கிரேட் 3 நிர்வாக அலுவலர் பணி

ஊதியம் எவ்வளவு?

Level 22-ன் படி, குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊதியம் வழங்கப்படும். அதாவது ரூ.56,100- ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும். 

தேர்வு முறை

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • நேர்காணல்

முதல்நிலைத் தேர்வு

பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள்

திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள்

  • கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வு

உதவி ஆணையர் பதவிக்கு

முதல் தாள் - தமிழ் தகுதித் தேர்வு  (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள்

இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்)- – 250 மதிப்பெண்கள்

மூன்றாம் தாள் – இந்து சமயம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்

4ஆம் தாள் – சட்டம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்

மொத்தம் – 750 மதிப்பெண்கள்

நேர்காணல் – 100 மதிப்பெண்கள்

ஒட்டு மொத்தம் – 850 மதிப்பெண்கள்

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 419 0958 என்ற இலவச எண்ணை அழைக்கலாம். (அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அழைக்கலாம்.)

விண்ணப்பக் கட்டணம்:

முதல்நிலைத் தேர்வுக்கு – ரூ.100

முதன்மைத் தேர்வுக்கு – ரூ. 200

சிறப்புப் பிரிவினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப கட்டணத்தில் சலுகையோ, நீக்கமோ உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

போதிய விவரங்களை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.  

முழுமையாக விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget