மேலும் அறிய

TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

TNPSC Group 1 Exam 2024 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

90 காலி இடங்கள்

குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

என்னென்ன பணியிடங்கள்?

வ.எண் பணியிடத்தின் பெயர் காலி இடங்கள்
1 துணை ஆட்சியர் 16
2 துணை காவல் கண்காணிப்பாளர் 23
3 உதவி ஆணையர் (வணிக வரித்துறை)

14

4 துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்

21

5 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர்

14

6 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

1

7 தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர்

1

  மொத்தம்

90

வயது வரம்பு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும்.  இதில் எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தேதிகள்

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு தேர்வர்கள் இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப். 27 இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி இரவு 11.59 வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் முதன்மைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தேர்வு முறை

* முதல்நிலைத் தேர்வு

* முதன்மைத் தேர்வு

* நேர்காணல்

முதல்நிலைத் தேர்வு – பொதுப் பாடத்திட்டம்  (175 கேள்விகள்), ஆப்டிட்யூட் தேர்வு (200 கேள்விகள்) – மொத்தம் 300 மதிப்பெண்கள். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Embed widget