TNPSC Exams: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் திடீர் மாற்றம்: இதுதான் காரணம்
TNPSC Exams Postponed: மிக்ஜாம் புயல் காரணமாக கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் 06.12.2023 (புதன் கிழமை) அன்றும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 34/2022 ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் 04.12.2023 மு.ப. & பி.ப. மற்றும் 06.12.2023 மு.ப. உள்ள நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக வருகிற திங்கள் கிழமை (04.12.2023) சென்னை, இருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும்
செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நாளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் 06.12.2023 (புதன் கிழமை) அன்றும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே திங்கட்கிழமை (04.12.2023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கழமை (06.12.2023) அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத் கேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் &
செயலாளர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
புயல் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.