TNPSC CESE 2022: மிஸ் பண்ணாதீங்க! தமிழக அரசில் காலியாக உள்ள 626 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்!
TNPSC CESE 2022: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய, தானியங்கிப் பொறியாளர், இளநிலை மின் ஆயவாளர், உதவி பொறியாளர், உதவி இயக்குனர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் சேர விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன. இந்தப் பதவிகளுக்கான காலிபணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதறகான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி நடக்க இருக்கிறது. எழுத்துத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 626
பணியிடங்கள் விவரம்:
தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04 ரூ.56,100 - 2,05,700
இளநிலை மின் ஆய்வாளர் - 08 பணி: உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66 ,உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) – 33,
உதவி இயக்குநர்ஷ்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18, உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) - 01, உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) - 1+ 307,முதலாள் - 07, தொழில்நுட்ப உதவியாளர் - 11, உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 93 ஆகிய பதவிகளுக்கு ஊதியமாக மாதம் ரூ. 37,700 - 1,38,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64 மற்றும் உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) - 13 மாதத்திற்கு ரூ.37,700 - 1,38,500 வரை ஊதியம் வழஙக்கப்பட உள்ளது.
தகுதி என்ன?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் தகவலுக்கு டி.என்.பி.எஸ்.சி. இன் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பை காணலாம்.(அறிவிப்பு செய்தி பற்றிய லிங்க இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளக்து.)
கட்டணம்:
எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150ஐ செலுத்த வேண்டும். இதன் மூலம் அடிப்படை விவரங்களை பதிவு செய்யலாம். 150 ரூபாய் கொடுத்து உங்களுடைய தகவலை நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம். இவை பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். மேலும், இந்த பதிவிக் கட்டணம் காலிப்பணியிடங்களுக்கான பதவிகளின் கட்டண தொகையான எடுத்துக்கொள்ளப்படாது. தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு விவரம்:
26.06.2022 அன்று காலை 9.30-12.30 மணி வரை முதல் தாள்( பாடம்)
26.06.2022 அன்று பிற்பகல் 2.00-5.00 மணி வரை இரண்டாம் தாள் (கட்டாயத் தமிழ் தேர்வு மற்றும் பொது அறிவு)
ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள்: 03.05.2022
இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இது தொடர்பான,வயது வரம்பு, எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு விண்னப்பக்க கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள டி.என்.பி.எஸ்.சி.-இன் இணையதளத்தை அணுகவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் PDF வடிவத்தில் படிக்க கீழெ இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
ஆங்கிலம்- https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf
தமிழ்- https://tnpsc.gov.in/Document/tamil/2022_10_CESE_tam.pdf
மேலும் விவரங்களுக்கு.. https://www.tnpsc.gov.in/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்