மேலும் அறிய

TNEA Counselling: தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; செப்.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

TNEA Supplementary Counselling 2023: பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், செப்.3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், செப்.3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். 

பொறியியல் படிப்பில் சேர 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 6 முதல் 8ம் தேதி வரை இணைய வழியில் துணைக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 

பி.இ./ பி.டெக். பொறியியல்‌ பட்டப்படிப்புக்கான மாணாக்கர்‌ சேர்க்கைக்கான துணைக்‌ கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 2023-24 பொதுக்‌ கலந்தாய்வின்‌ முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, 12-ஆம்‌ வகுப்பு பொது (Academic) மற்றும்‌ தொழிற்‌பயிற்சி (Vocational) பயின்று சிறப்பு துணைத் தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்கள் மற்றும்‌ 2023 பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இயலாத மாணவர்களும்‌ https:/www.tneaonline.org அல்லது https:/www.dte.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TNEA Facilitation Centers - டிஎஃப்சி) மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம்?

OC/ BC/ BCM/ MBC & DNC - ரூ.500
எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி - ரூ.250

கட்டணத்தைச் செலுத்துவது எப்படி?

பதிவுக் கட்டணத்தை பற்று அட்டை, கடன் அட்டை மற்றும்‌ இணையவழி வங்கிக் கணக்கு ( Credit Card /Debit Card/ Net Banking / UP) வழியாக செலுத்த வேண்டும்‌. கேட்பு வரைவோலையாக (Demand Draft) செலுத்த விரும்பும்‌ ண்ண ர்கள்‌  “The Secretary, TNEA,  payable at Chennai என்ற பெயரில்‌ 28.08.2023 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட வரைவோலையை அருகாமையில்‌ இயங்கும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி மையத்தில்‌ மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்‌. 

இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ பதிவு செய்ய தொடங்கும்‌ நாள்‌ - 28.08.2023
இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பப்‌ பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்‌ - 03.09.2023

மாணவர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களைப் பதிவேற்றம்‌ (upload) செய்ய வேண்டும்‌.

மேலும்‌, இணையதளம்‌ வாயிலாக சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி (டிஎஃப்சி) மையத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்‌போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌ மட்டுமே அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்‌:1600-425-0110. 

கூடுதல் விவரங்களுக்கு: https://suppl.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

தொலைபேசி எண்கள்: 044- 22351014, 044-22351015

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
Embed widget